அருள்மிகு காஞ்சமடை அய்யனார் திருக்கோவில் (திருச்சிற்றம்பலம்)
God Name : அய்யனார்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
இவ்வூரின் காவல் தெய்வமான அய்யனார், சுற்றுவட்டார பல கிராமங்களுக்கு குலதெய்வமாகப் போற்றப்படுகின்றார்.
ஊரின் காவல் தெய்வமான இவர் நடு இரவில் ஊரை வலம் வரும் ஓசை கேட்பதாகக் கூறப்படுகிறது.
பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பல்லிகளின் சப்தங்கள் மூலமாக சம்மதம் அல்லது தீர்வு கிடைப்பதாக நம்பிக்கை.
கருவறைக்குள் பாம்புகள் சர்வ சாதாரணமாகச் சென்று வரும். மணியோசை கேட்டதும் வெளியேறுவதும் அன்றாட
நிகழ்வுகள்.
இவ்வூரிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சப்தமாதர்கள் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.
பச்சைப் பசேலென்று வயல்களும், கரும்புச் சோலைகளும் நிறைந்த இடத்தில் கோயில் கொண்டுள்ளார் அய்யனார்.
கோயிலின் வெளியே அழகான பெரிய குதிரையின் வண்ணச் சுதை சிற்பம் இருக்கின்றது. குதிரையினருகே
சங்கிலி கருப்பனின் அழகிய வடிவம் காணலாம்.
மகாமண்டபத்தில் யானையையும் பலி பீடத்தையும் காணலாம். தனி சந்நிதியில் வீரன் மற்றும் பிள்ளையார்
திருவுருவங்களைக் காணலாம்.
மூலஸ்தானத்தில் புராண அய்யனாரையும், புதிய பிரதிஷ்டையான அய்யனாரையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.