அருள்மிகு நாகநாதஸ்வாமி திருக்கோவில் (மணல்மேடு)
God Name : ஸ்ரீ நாகநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பூமியின் பாரம் அதிகரித்ததால், பளு தாங்கமுடியாமல் சிரமப்பட்ட ஆதிசேஷன், தனக்கு அதீத பலம் வேண்டுமென கோரி, இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். பிரத்யட்சமாகி, அவனது விருப்பங்களுக்கேற்ப, இங்கேயே நாகநாதர் எனும் பெயரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பங்குனி உத்திரத் திருநாளில் இடும்பனுக்கு மூலமந்திர உபதேசம் செய்த முருகப்பெருமான் இங்கு விசேஷ மூர்த்தியாக விளங்குகிறார். கொள்ளிட நதிக்கரையில் பங்குனி உத்திரத் திருநாளன்று இடும்பனுக்கு காவடி எடுக்கும் ஐதீகம் நடைபெறுகின்றது. ராகு-கேது இருவரும் திருமணக் கோலத்தோடு இங்கு வந்து நாகநாதரை வழிபட்டுள்ளதால், திருமணத் தடை உள்ளவர்கள் இவ்விறைவனை பூஜித்தால், நற்பலன்கள் கிடைக்கும் என அர்ச்சகர் கூறுகின்றார்.
மூலவர்: ஸ்ரீ நாகநாதர், அம்பாள்: ஸ்ரீ சௌந்தர நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் ஸ்ரீ நாகநாதர். ஆதிசேஷன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம். சதுர வடிவிலான மூலஸ்தானம். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ சௌந்தர நாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மகாமண்டபத்தில் ஸ்தல விநாயகர், சனீஸ்வரர், நிருதி திசையில் நிருதி விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகிய சந்நிதிகளை தரிசிக்கலாம். மேற்கு பிரகாரத்தில் சுப்ரமண்யர், இடும்பன், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகளும், உட்பிரகாரத்தில் நர்த்தன விநாயகரையும், அழகிய கோஷ்ட மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.