அருள்மிகு திருமேனியார் திருக்கோவில் (கடலங்குடி)
God Name : திருமூலநாதஸ்வாமி எனப்படும் திருமேனியார்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஸ்தல வரலாறு:
சிவபெருமானை அழைக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர்பாகத்தைத் தராமலும், தட்சன் நடத்திய யாகத்திற்கு அக்னி தேவன் சென்று யாகத்தில் கலந்துகொண்டதால், சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளாகி, உடல் முழுவதும் ரோகம் அடைந்தான்.
செய்த பிழையை மன்னித்தருள வேண்டி, இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இறைவனை வழிபட்டு நோய் நீங்கப் பெற்று, அழகிய திருமேனி பெற்றான் என்பது இத்தல வரலாறு.
நோய்வாய்ப்பட்டவர்கள் இத்தலம் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, திருமேனியாரை வழிபட்டு நற்பலன்கள் பெறுவதாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திருமூலநாதஸ்வாமி என்கிற திருமேனியார். மூலவரின் ருத்ர பாகமான பாணம் உயர்ந்தும், விஷ்ணு பாகமான ஆவுடையார் அகன்றும், பிரம்ம பாகமான பீடம் சதுரமாகவும் இருப்பதால் இவர் திருமேனியார் என்றழைக்கப்படுகிறார்.
சதுர் புஜங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தரும் அன்னை சௌந்தரநாயகி, பெயருக்கேற்றாற்போல சௌந்தர்யமாகக் காட்சியளிக்கின்றாள்.
ஸ்தல விநாயகர், கோஷ்டத்து மூர்த்தங்கள், காசி விஸ்வநாதர், பெருமாள், லட்சுமி, சரஸ்வதி மற்றும் நடன கணபதி ஆகிய மூர்த்தங்களை இங்கு தரிசிக்கலாம்.
இது நீர்வளம் நிறைந்த பசுமையான கிராமம். ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.