அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (ஆத்தூர்)

God Name : சொர்ணபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சிவபக்தரின் மகளாகப் பிறந்த கயற்கண்ணி அப்போதும் மனதில் சிவபெருமானையே நினைத்துக் கொண்டு பூஜித்து வந்தாள். ஒரு பிரம்மச்சாரி வேடம் பூண்டு வந்த மந்தாரவனேஸ்வரர், கயற்கண்ணியை மணந்ததாக ஸ்தல வரலாறு. திருக்குளத்திலிருந்த தவளை ஒன்று, பாம்பினால் விழுங்கப்பட்டு, உயிர் பிரியும் தருவாயில் அஞ்சனாட்சி அன்னை பஞ்சாட்சர உபதேசம் செய்ததால் சிவகணமாக மாறியதாக ஸ்தல வரலாறு. மண்ணியாறுக்கும் பழவாறுக்கும் இடையே உள்ள ஸ்தலம் என்பதால் ஆற்றூர் எனப் பெயர் கொண்டு காலப்போக்கில் மருவி ஆத்தூர் என்றானது. ஜாதகத்தில் ராஹு 1, 2, 5, 7, 8, 11ம் இடங்களில் இருப்பவர்கள், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், சுக்கிர தோஷம் உள்ளவர்கள் ஆகியோர்க்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கண் திருஷ்டி, கோர்ட் கேஸ்கள் ஆகியன விலக சொர்ண பைரவருக்கு அஷ்டமியன்று செவ்வரளியில் அர்ச்சனை செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சொர்ணபுரீஸ்வரர். ஒளி வீசும் அழகிய லிங்க மூர்த்தம். இவருக்கு மந்தாரவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மகா மண்டபத்தின் வலதுபுறமாக உள்ள சந்நிதிகளில் இரண்டு அம்பாளை தரிசிக்கலாம். தென் திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் கயற்கண்ணி அம்பிகையும், தனி சந்நிதியில் அஞ்சனாட்சி அன்னையும் எழுந்தருளியுள்ளனர். சிறப்பு மூர்த்தமாக அஷ்டபுஜ துர்க்கை கிளியுடன் காணப்படுகிறார். மேலும் பிரகாரத்தில் நிருதி விநாயகர், வள்ளி-தெய்வயானையுடன் முருகப் பெருமான், சொர்ண பைரவர், கஜலட்சுமி, சூரியன், சனீஸ்வரர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.