அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் (இலுப்பைப்பட்டு)

God Name : ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீ படிக்கரைநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: பிரளயம் சூழ்ந்த காலத்தில், பூமியை தோணியாக்கி மிதந்து வந்த சிவபெருமான் மண்ணியாற்றங்கரை அருகே நிறுத்தினார். வெள்ளத்தில் மிதந்து வந்த இலுப்பைக்கிளை ஒன்றினை பார்த்த உமாதேவியார் அது என்னவென்று கேட்க, அந்த மரத்தின் தெய்வீகத்தன்மையை விளக்கினார் சிவபெருமான். அதைக் கேட்ட விநாயகரும், சுப்ரமண்யரும் இங்கேயே எழுந்தருளி இருக்க வேண்டினர். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இங்கே கோவில் கொண்ட சிவபெருமான், இலுப்பை மரத்தை அக்னி திக்கில் நிற்க பணித்தார். பசு நெய்யினால் விளக்கேற்றினால் கிடைக்கும் பலனை, இலுப்பை எண்ணையில் ஏற்றினாலும் கிடைக்குமாறு வரத்தை கோரிப் பெற்றுக் கொண்டது விருட்சம். படைக்கும் திறன் அகன்ற பிரம்மா, அதை மீண்டும் பெற இங்கு பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி, நீராடி இலுப்பை மரத்தை பூஜித்து, இவ்விறைவனை வேண்டி, மீண்டும் படைக்கும் தொழிலை கைவரப் பெற்றார். விருத்தாசுரனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்திரன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, இவ்விறைவனை வேண்டி தோஷம் நீங்கப் பெற்று இந்திரலோகம் சென்றான் என ஸ்தல வரலாறு. சூதாட்டத்தில் நாடு நகரங்களை இழந்த பஞ்ச பாண்டவர்கள் உரோமச முனிவரின் அறிவுரைப்படி இத்தலம் வந்தனர். இங்கு வரும் முன் தங்களது ஆயுதங்களை வாளப்புத்தூர் எனும் ஊரில் மறைத்து வைத்தனர். இங்கு ஒரு மண்டலம் தங்கி, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தெய்வீக விருட்சத்தை வணங்கி இவ்விறைவனை வழிபட்டனர். ஒவ்வொருவரும் ஒரு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். துர்ப்புத்தி கொண்ட சகுனியின் யோசனையின்பேரில், துரியோதனன் பிரம்ம தீர்த்தத்தில் நஞ்சை கலக்கிறான். தீர்த்தத்திற்கு நச்சுப்பொய்கை என்ற பெயரும் வந்தது. இந்த நஞ்சு பாண்டவர்களைக் கொல்லும் என எண்ணினான் துரியோதனன். நீலகண்டேஸ்வரரின் அருளாலும் தேவியின் கருணையாலும் நஞ்சு அமுதமாக மாறியது. நஞ்சை அமுதமாக்கிய அமிர்த கலசம்தான் அம்பாள் அமிர்தகரவல்லியின் கரங்களில் உள்ளது. மண்ணியாற்றங்கரை அருகே இத்தலம் அமைந்திருந்ததால் பழமண்ணிப்படிக்கரை எனப் பெயருற்றது. சூரன் வதம் முடித்து தல யாத்திரை மேற்கொண்ட முருகன், இத்தலத்தில் வேல் கொண்டு உருவாக்கியதே சுப்ரமண்ய நதி எனப்படும் மண்ணியாறு என ஸ்தல வரலாறு. மதூகம் என்றால் இலுப்பை என்று அர்த்தம். இலுப்பை மரங்கள் மிகுந்து காணப்பட்ட பகுதியானதால் இலுப்பைப்பட்டு எனப் பெயர் கொண்டது. சித்ரா பௌர்ணமி இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. பஞ்ச மூர்த்திகளும் உலா வருவார்கள். தேவாரத்திருத்தலம் - பஞ்சலிங்க ஸ்தலம்.
மூலவர்: ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், அம்பாள்: அமிர்தகரவல்லி, மூலவர்: ஸ்ரீ படிக்கரைநாதர், அம்பாள்: மங்கல நாயகி. மாடக்கோவில் அமைப்பிலுள்ளது. முதலில் தரிசனம் தரும் குளத்து விநாயகரை வணங்கி ஆசி பெற்று, அடுத்து ஸ்தல விருட்சத்தினடியிலுள்ள இலுப்பையடி விநாயகரையும் நாகர்களையும் தரிசிக்கலாம். பல சந்நிதிகளை உள்ளடக்கிய பெரிய பிரகார வலச்சுற்றில் முதன்முதலாக நாம் தரிசிப்பது, பீமன் வழிபட்டு பூஜித்த லிங்கம். மகதீஸ்வரர் எனும் திருநாமம். 16 பட்டைகளுடன் கூடிய ஷோடஸ லிங்கமாக பிரம்மாண்டமான திருமேனியுடன் காட்சி தருகின்றார். அடுத்து நகுலன் பூஜித்து வழிபட்ட பரமேஸ்வரர் எனும் லிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். நாகாபரணம் தரித்து தேஜோமயத் திருமேனியாக காணப்படுகின்றார். தருமன் பூஜித்து வழிபட்ட சிவலிங்க மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்வாமிக்கு மேற்கே பிரகாரத்தில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அம்பாள் அமிர்தகரவல்லி தரிசனம் தருகின்றார். கட்கமாலை, அமிர்த கலசம், அபய-வரத முத்திரைகள் கொண்ட சதுர்புஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. அர்ஜுணன் பூஜித்து வழிபட்ட ஸ்ரீ படிக்கரைநாதரும், ஸ்வாமிக்கு கிழக்கே அம்பாள் மங்கலநாயகியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அடுத்து சகாதேவன் பூஜித்து வழிபட்ட முத்தீஸ்வரரை தரிசிக்கலாம். திரௌபதி பூஜித்த வலம்புரி விநாயகரும், படிக்கரைநாதர் மற்றும் கோஷ்டத்து - நடன விநாயகரும் அழகாக இருக்கின்றனர். இரண்டு மூலவர்களின் கோஷ்டத்து மூர்த்தங்கள் அல்லாது, இரண்டு சுப்ரமண்யர், இரண்டு சண்டிகேஸ்வரர்கள், பிரதோஷ நந்தி மற்றும் அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.