அருள்மிகு குந்தளநாதேஸ்வரர் திருக்கோவில் (திருக்குரக்குக்கா - திருக்குறைக்காவல்)
God Name : குந்தளநாதேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ராவண சம்ஹாரம் முடித்து, சீதையை மீட்டு, சேது திரும்பிய ராமர், ராவணனைக் கொன்ற தோஷம் நீங்க சிவலிங்க
பூஜை செய்ய எண்ணி, ஹனுமனை அழைத்து ஒரு லிங்கம் கொண்டு வர பணித்தார்.
காசிக்கு சென்ற ஹனுமன், கால பைரவரோடு சண்டையிட்டு, பின்னர் சமாதானமாகி, லிங்கம் பெற்று வருவதற்குள்,
மணலால் லிங்கம் ஒன்றினை அமைத்து வழிபட்டார் ராமர். கோபம் கொண்ட ஹனுமன், அந்த மணல் லிங்கத்தை
தனது வாலால் கட்டி இழுக்க முற்பட, வால் அறுபட்டது.
அசரீரி வாக்குப்படி தலைஞாயிறு ஸ்தலம் சென்று தனது குற்றத்தைப் பொறுத்தருள வேண்டி நின்றார். செய்த சிவ
அபராதம் நீங்க, இவ்விறைவனை வழிபட்டார். அறுந்த வாலும் வளர்ந்தது.
இத்தலம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, லிங்கப் பிரதிஷ்டை
செய்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு. ஹனுமன் வழிபட்ட ஸ்தலம் என்பதால், அவரது பெயராலேயே திருக்குரக்குக்கா
என அழைக்கப்பட்டது.
சித்திரை-வைகாசி மாதங்களில் இரண்டு குரங்குகள் இவ்வாலயத்திற்குள் வரும். ஒரு குரங்கு, வில்வமரத்தின் மீதேறி
வில்வ இலைகளை பறித்துப் போடும். மற்றைய குரங்கு, பறித்த வில்வ இலைகளை குந்தளேஸ்வரர் மீது தூவும். இந்த
அற்புத நிகழ்ச்சிகளை கண்ட ஊர் மக்கள் அதிசயிக்கின்றனர்.
தேவாரத்திருத்தலம்
மூலவர்: குந்தளநாதேஸ்வரர், அம்பாள்: குந்தள நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் குந்தளநாதேஸ்வரர். மணலால் உருவாக்கப்பட்டு,
ஹனுமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம். ஹனுமன் தனது குண்டலங்களை வைத்து வழிபட்டதால்
குண்டலகேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் குந்தள நாயகி அழகு திருவுருவமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
புத்ர பாக்யம் வேண்டுவோர் குந்தள நாயகிக்கு வளையல் சாத்தி பிரார்த்திக்கின்றனர். மஹாமண்டபத்தில்
நின்றபடி ஸ்வாமி அம்பாள் இருவரையும் ஒருசேர தரிசிக்கலாம்.
கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. விநாயகர், வனதுர்க்கை, வள்ளி-தெய்வயானை உடனாய
முருகப் பெருமான், மற்றும் கிராம தேவதையான செல்லியம்மன் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். அப்பரின்
திருவுருவம் அழகாக இருக்கிறது.
ஆலயத்துள் வலதுபுறமாக உள்ள தனிக்கோவிலில் சிவபக்த ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு
அமாவாசையன்றும் விசேஷ ஹோமங்கள் நடைபெறும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.