அருள்மிகு துர்காபுரீஸ்வரர் திருக்கோவில் (கிடாத்தலைமேடு)
God Name : மூலவர்: ஸ்ரீ துர்காபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஸ்ரீ துர்க்கா தேவி, அனைவரையும் இம்சித்த மகிஷாசுரன் எனும் அசுரனின் தலையை, துண்டித்து வீழ்த்திய இடம் மேடானதால் கிடாத்தலைமேடு எனப் பெயருற்றது இவ்ஊர்.
சிவபெருமான் மீது மலரம்புகள் வீசி அவரது த்யானத்தை கலைத்த மன்மதன், சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு இறந்தான். மன்மதனை உயிர்ப்பிக்க வேண்டி ரதி தேவி மன்றாடியதால், அவனுக்கு உயிர் கொடுத்து, ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி, வரமருளினார்.
செய்த தவற்றிற்கு பிராயச்சித்தம் வேண்டி மன்மதனும் ரதியும் இங்கு தவமிருந்தனர். கரும்பு வில்லையும் புஷ்ப பாணங்களையும், அம்பாளிடமிருந்து மீண்டும் பெற்றனர். இதனால் அன்னைக்கு காமுகாம்பாள் என்ற பெயரும் வந்தது.
துர்க்கை சிலை செய்வது பூர்த்தியாகி பிரதிஷ்டை பண்ண இருக்கும் தறுவாயில், சிற்பியின் கனவில் தோன்றிய துர்க்கை, தனக்கு மூக்குத்தி வேண்டுமென கேட்டுள்ளாள். சிலை முடித்தபின் மாற்றங்கள் செய்தால், பின்னமாகி விடுமே என அஞ்சிய சிற்பி, செய்வதறியாது குழம்பிய நிலையில், உளியைவைத்தவுடனேயே, சிறிய துவாரம் ஒன்று தானாக ஏற்பட்டு, அதில் மூக்குத்தி பொருந்திக் கொள்ளும் அதிசயம் நிகழ்த்திய துர்க்கை.
ஒரு விசேஷ ஏற்பாட்டில், இத்தலத்தில், 300 சுமங்கலிப் பெண்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்து, புடவை மற்றும் மங்கலப் பொருட்கள் விநியோகம் செய்தனர். அப்போது வயதான மூதாட்டியாக துர்க்கா தேவியே வந்து உணவருந்தி, புடவை பெற்றுக் கொண்டு போனதை ஊர் மக்கள் நினைவு கூர்கின்றனர்.
மூலவர்: ஸ்ரீ துர்க்காபுரீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ காமுகாம்பாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ துர்க்காபுரீஸ்வரர். இவ்விறைவனை துர்க்கா தேவி பூஜித்து வழிபட்டு ஹத்தி தோஷம் நீங்கப் பெற்றாள். இதனால் இவருக்கு துர்க்காபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அன்னை காமுகாம்பாள் தரிசனம் தருகின்றாள்.
நிருதி கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், பைரவர், சூரியன், நாகர், கஜலட்சுமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இத்தலத்தின் நிருதி பாகத்தில் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் துர்க்கா தேவியானவள் மிகுந்த வரப்பிரசாதி. மகிஷாசுரன் தலை மீது நின்ற திருக்கோலம். அஷ்ட புஜங்களில் - சக்கரம், பாணம், வில், கேடயம், கத்தி போன்ற ஆயுதங்களுடனும், அபய-வரத முத்திரைகளுடனும், இடது கரம் தொடையில் பதித்தும், சாந்த ஸ்வரூபியாக, சிம்ம வாஹினியாக காட்சி தருகின்றாள்.
துர்க்கை சந்நிதியில் ஸ்ரீ சக்ர பூர்ண மஹாமேரு ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. சிலா விக்ரஹத்திற்கு மூக்குத்தி அணிவித்திருப்பது அதிசயமான ஒன்று. விசேஷ ஆராதனைகளின்போது துர்க்கா தேவியின் முகத்தில் வியர்வை தோன்றுவதும் அதிசயமான ஒன்று.
துர்கா தேவியின் எதிரில் மேற்கு பிரகாரத்தில் 20 அடி மற்றும் 10 அடி உயரங்கள் கொண்ட இரண்டு சூலங்கள் உள்ளன. அதன் கீழ் சாமுண்டிஸ்வரியின் திருவுருவம் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.