அருள்மிகு அமர்ந்தாளம்மன் திருக்கோவில் (சேந்தங்குடி)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

துர்கமாசுரன் எனும் கொடிய அசுரன் பிரம்மனை வேண்டி தவமிருந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்து பிரத்யட்சமான பிரம்மனிடம் - தேவர்கள், மகரிஷிகள் ஆகியோரின் மந்திரங்களும் அதன் பலன்களும் தன்னையே சேர வேண்டுமென்ற வரத்தை கோரிப் பெற்றான். மந்திரங்களின் பலன்களும், பயனும் அசுரனிடம் சேர்ந்து விட்டதால் அவன் மிகுந்த பலம் பெற்றான். அவனுக்குப் பயந்த மகரிஷிகள் தவம் செய்வதையும் வேள்விகள் செய்வதையும் நிறுத்தினர். நாட்டில் சுபிட்சம் குறைந்து வறுமையும், வறட்சியும் நிலவியது. இந்நிலையிலிருந்து விடுபட, மஹரிஷிகள் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களைக் காப்பாற்ற போர்க்கோலம் பூண்டாள் பராசக்தி. வில், அம்பு, பாசம், தண்டம், சூலம், வஜ்ரம், வேல், சக்கரம் ஆகிய ஆயுதங்களை ஏந்தி, சிம்ம வாஹினியாகத் தோன்றி துர்கமாசுரனை அழித்தாள். வேதமந்திரங்கள் நிலைத்திருக்க நடத்தப்பட்ட இந்த யுத்தம் - திருவாளப்புத்தூர், பட்டவர்த்தி, கொருக்கை ஆகிய இடங்களில் நடந்தது. துர்கமாசுரன் தலை கொய்யப்பட்ட இடம் கொருக்கை. தர்ம யுத்தத்தில் வெற்றி பெற்ற துர்கா பரமேஸ்வரி - சப்த மாதர்களான ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ இந்திராணி, ஸ்ரீ சாமுண்டி, ஸ்ரீ ப்ராம்மி, ஸ்ரீ மாஹேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி ஆகியோருடன் சேர்ந்து அமர்ந்ததால் அமர்ந்தாளம்மன் என்று அழைக்கப்படுகின்றாள். சேர்ந்து அமர்ந்ததால் இவ்வூர் சேர்ந்தகுடி என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி சேந்தங்குடி என்றானது.
மூலஸ்தானத்தில் ஆனந்தமாய் அமர்ந்திருக்கும் துர்கைக்கு அமர்ந்தாளம்மன் எனும் திருநாமம். பொன் நிறமான திருமேனி, சிரசில் சந்திர கலை, சங்கு-சக்கரம், அபய-வரத முத்திரைகள் கொண்ட சதுர்புஜங்கள் ஆகியவற்றுடன், சர்வாலங்கார பூஷணியாக பொற்றாமரையில் அமர்ந்து ஆசி வழங்குகிறாள். பரிவாரத் தெய்வங்கள் யாவும் அழகுற அமைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. சக்தி பூஜை சாஸ்திரப்படி நித்ய பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.