அருள்மிகு கார்க்கோடகநாதர் திருக்கோவில் (கோடங்குடி)
God Name : கார்க்கோடகநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சப்த ராஜ நாகங்களுள் ஒருவனான கார்க்கோடகனாகிய சர்ப்பராஜன், தான் கொண்ட சாபத்திலிருந்து விடுபட, இத்தலத்தில் பத்மசரஸ் எனும் தீர்த்த தடாகம் அமைத்து, அதன் கரையில் சிவலிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து, தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட்டான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்து பிரத்யட்சமான இறைவன் அவன் கோரிய வரங்களை அருளினார்.
கார்க்கோடகன் வழிபட்ட ஸ்தலம் என்பதால், இவ்வூர் கார்க்கோடக்குடி என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கோடங்குடி என்றானது.
மூலவர்: கார்க்கோடகநாதர், அம்பாள்: கைவல்யாம்பிகை.
மூலஸ்தானத்தில் கார்க்கோடகநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அழகிய பெரிய திருமேனி கொண்டவர்.
கார்க்கோடகன் எனும் சர்ப்பராஜன் பூஜித்ததால், இவர் கார்க்கோடகநாதர் எனும் திருநாமம் கொண்டார்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் கைவல்யாம்பிகை, ராஜராஜேஸ்வரி அம்சமாகவும், துர்க்கா ஸ்வரூபமாகவும் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ சக்கரமும், ஜெய சக்கரமும் இரு புறமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
1952ல் மஹா பெரியவாளான பரமாச்சார்யார் இங்கு வந்து அம்பிகையை தரிசித்து பூஜித்துள்ளார். இவ்வூர் மக்களுக்கு இத்தலத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார் என ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.