அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோவில் (மூவலூர்)
God Name : மார்க்கசகாயேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மகிஷாசுரனை வதம் செய்வதற்காக கோர உருவம் கொண்டு வந்த துர்க்கை அவனை சம்ஹாரம் செய்த பின் மீண்டும் பழையபடி அழகான உருவம் பெற வேண்டி இவ்விறைவனை பிரார்த்தித்தாள்.
ஒரு மண்டலம் இங்குள்ள பொய்கையில் நீராடி மார்க்கசகாயேஸ்வரரை வழிபட்ட துர்க்கை, தன் கோர உருவத்திலிருந்து விடுபட்டு சௌந்தர நாயகியானாள். இத்தலத்திலேயே தன்னை மணந்து கொள்ள வேண்டும் என சௌந்தர நாயகி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவளை மணம் செய்து கொள்கிறார்.
திருவதிகை எனும் ஊரில், வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய முப்புராதி அசுரர்களை அழிக்க சிவனார் அம்பு தொடுக்கும் வேளையில், தாங்கள் ஆயுதங்களாக இருந்து உதவுவதால்தான், அசுரர்களை அழிக்க சிவபெருமானால் முடிகிறது என்ற கர்வமான எண்ணம், பிரம்மா-விஷ்ணு மற்றும் தேவாதி தேவர்களுக்கு தோன்றியது.
இதை உணர்ந்த சிவனார், ஆயுதங்களை பயன்படுத்தாமல் நெற்றிக்கண் கொண்டு அசுரர்களை எரித்தார். சிவநிந்தனை செய்த பாவத்திற்கு ஆளான பிரம்மா-விஷ்ணு ஆகியோர் பிராயச்சித்தம் வேண்டி நின்றனர். காவிரிக்கரையில் இருக்கும் புன்னாகவனம் சென்று அங்குள்ள சுயம்பு லிங்கத்தை வழிபடுமாறு பணித்தார்.
பிரம்மா விஷ்ணு இருவரும் இத்தலத்தை அடைந்து சுயம்பு லிங்கத்தை தேடினர். ருத்ர மூர்த்தியாக அங்கு வந்த சிவபெருமான் மரத்தடியிலுள்ள தழைகளை விலக்கி அவர்களுக்கு சுயம்பு லிங்கத்தை காண்பித்தார். உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் தாங்களே லிங்கத்தை பூஜித்து வழி காட்டுங்கள் என்றனர். ருத்ரரும் மலர்களால் அர்ச்சித்து லிங்கத்தை பூஜித்தார். அதைத் தொடர்ந்து பிரம்மாவும் விஷ்ணுவும் லிங்கத்தை பூஜை செய்தனர். சப்த மாதர்களும் வழிபட்டுள்ளனர்.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்டதால் மூவரூர் என அழைக்கப்பட்டு, தற்போது மூவலூர் என்றானது. அத்தலத்தை சுட்டிக் காட்டியதாலும், பூஜை செய்யும் வழிமுறைகளைக் காட்டியதாலும் வழி காட்டும் வள்ளல் என்ற பெயர் வந்தது.
(மயிலாடுதுறையின் கிழக்கே உள்ள விளநகரில் - துறை காட்டும் வள்ளல், மேற்கே உள்ள மூவலூரில் - வழி காட்டும் வள்ளல், தெற்கில் பெருஞ்சேரியில் - வாக்கு வள்ளல், உத்திர மாயூரத்தின் கை காட்டும் வள்ளல்).
திருவாவடுதுறை ஆதீன சமயக்குரவர் நமச்சிவாய மூர்த்திகளின் அவதார ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: மார்க்கசகாயேஸ்வரர். அம்பாள்: சௌந்தர நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மார்க்கசகாயேஸ்வரர். அழகான திருமேனி. சுயம்பு லிங்கம்.
வழித்துணை நாதர், வழி காட்டும் வள்ளல் என்றெல்லாம் போற்றப்படுபவர். புன்னை மரத்தடியில் தோன்றியதால் புன்னாகவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
அம்பாளின் திருவுருவம் பெயருக்கேற்றபடி சௌந்தர்யமாகவே உள்ளது. அழகிய நாயகி என்றும் கூறுவர். சாபத்தினால் மயில் உருவம் கொண்ட பார்வதி, இத்தலத்தில் மயிலாக வந்து சிவபூஜை செய்துள்ளார். இதனால் ஸ்ரீ மயிலாம்பாள் என்ற அம்பாளும் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இவளுக்கு ஸ்ரீ அஞ்சல் நாயகி என்ற பெயரும் உண்டு.
சிவலிங்கத்தை மும்மூர்த்திகள் வழிபடும் புடைப்பு சிற்பம் ஒன்று கருவறை சுவரில் காணப்படுகின்றது. சங்கு-சக்கரம், கத்தி-கேடயம், அபய-வரத ஹஸ்தங்கள் கொண்ட ஆறு திருக்கரங்களுடன் அற்புதமான சிற்பம் - அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.
அம்பாள் சந்நிதிக்கு மேற்புறமாக சப்த மாதர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரகார வலச் சுற்றில் அநேக மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.