அருள்மிகு ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (செம்பனார்கோவில்)

God Name : ஸ்வர்ணபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தை அளிக்காமல் அவரை அவமதிக்கும் பொருட்டு, தட்சனால் நடத்தப்பட்ட யாகத்தைத் தடுக்க திருப்பறியலூர் வந்த தாட்சாயிணியை அவமதித்து அனுப்புகிறான் தட்சன். சிவநிந்தை புரிந்தவனின் மகள் என்ற இழிச்சொல் நீங்கவும், தோஷம் போகவும் இவ்வூர் வந்தடைந்து, பஞ்சாக்னி வளர்த்து தவம் புரிந்தாள் தாட்சாயிணி. அவளை மன்னித்து மருவார் குழலியாக ஏற்றுக்கொண்டார் ஸ்வர்ணபுரீஸ்வரர். விருத்தாசுரனைக் கொல்ல இந்திரன் வழிபட்ட இறைவன் இருக்கும் ஸ்தலம். தாராசுரனை வதம் செய்ய சுப்ரமண்யர் இவ்விறைவனை வழிபட்டுள்ளார். தட்சனை வதைக்க வீரபத்ரர் தோன்றிய இடம். கார்த்திகை சோம வாரங்களில் நடக்கும் 108 சங்காபிஷேகமும், ஐப்பசி மாத பௌர்ணமியில் நடக்கும் அன்னாபிஷேகமும் இங்கு பிரசித்தம். இவ்வூர் பெண்கள் புதிய நகைகள் வாங்கினால், இங்குள்ள அம்பாளுக்கு அணிவித்து அழகு பார்த்து பின்னரே தாங்கள் அணிந்துகொள்வார்களாம். தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஸ்வர்ணபுரீஸ்வரர், அம்பாள்: மருவார் குழலி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் ஸ்வர்ணபுரீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். 16 இதழ்கள் மேற்புறமும், 16 இதழ்கள் கீழ்புறமும் கொண்ட தாமரை வடிவ ஆவுடையாருடன் கூடிய அழகான வட்ட வடிவ லிங்கம். சித்திரை மாதம் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை - 12 நாட்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது படர்ந்து ஒளிமயமாக்குகிறது. இதை சௌர மகோற்சவம் என விழாவாகக் கொண்டாடுகின்றனர். அம்பாள் மருவார் குழலியம்மை தெற்கு பார்த்த தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ சுகந்தளாங்கி, சுகந்த குந்தளாம்பிகை, தாட்சாயிணி ஆகிய திருநாமங்களும் உண்டு. ஸ்வர்ணத்தைப் பெருக்கி சுபிட்சத்தை அளிப்பவள். ஆடி மாதம் 2வது வெள்ளிக்கிழமையன்று ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு செய்யும் திருவிளக்கு பூஜையும், சப்த மாதர்கள் வழிபாடும் பிரசித்தம். சிவ கோஷ்ட மூர்த்தங்களோடு - சூரிய மஹா கணபதி, சூரிய லிங்கம், ஸ்தல விநாயகரான பிரகாசப் பிள்ளையார், சந்திர லிங்கம், காசி விஸ்வநாதர், சிபி காட்சி நாதர், செம்மான் மழு ஏந்திய சிவபெருமான், ஸ்ரீ நிவாசப் பெருமாள், வீரபத்ரர், ஜேஷ்டா தேவி, வனதுர்க்கை ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். இத்தலத்தில் துவாதச (12) ஆதித்யர்கள் எழுந்தருளியுள்ளனர். இங்கு சூரிய புஷ்கரிணி ஒன்றை அமைத்து இவ்விறைவனை வழிபட்டதாக ஸ்தல வரலாறு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.