அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோவில் (திருநனிபள்ளி - புஞ்சை)
God Name : திருநனிபள்ளி புஞ்சை நற்றுணையப்பர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஸ்தல வரலாறு:
அகஸ்தியரின் கமண்டலத்து நீரை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க, இங்குள்ள குளத்து நீரில் நீராடி, இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். இதனை பொன்செய் என்பர். இதுவே நாளடைவில் மருவி புஞ்சை என்றானது.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த ஸ்தலம்.
அவரது தந்தையாரான சிவபாத இருதயர் தோளின் மீது அமர்ந்தபடி சம்பந்தர் பதிகம் பாடினார்.
பாலை நெய்தல் பாடியதும் பாலையாக இருந்த நிலங்கள் நெய்தலாக (விளை நிலங்களாக) மாறியது.
அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய ஸ்தலம்.
திருஞான சம்பந்தரின் தாயார் பிறந்த ஊர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் நற்றுணையப்பர்.
சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. சித்திரை மாதம் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் இறைவன் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
கருவறைக்குள் ஒரு யானை சென்று மூலவரை சுற்றி வரும் அளவுக்கு விசாலமாக அமைத்துள்ளனர்.
அம்பாள் மலையான் மடந்தை தனி சந்நிதி கொண்டுள்ளார். பர்வத ராஜ புத்ரி என்றும் அழைப்பர்.
16 தூண்களுடன் கூடிய முகமண்டபத்தில் அழகிய மகர தோரணங்கள். அதில் விநாயகப் பெருமான், கல்யாணசுந்தரர், அர்த்தநாரீஸ்வரர், நடனமிடும் காளி, ஊர்த்துவ தாண்டவ நடராஜர் ஆகியோரின் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. இங்குள்ள தட்சிணாமூர்த்தியை விட அழகிய அருளாளன் வேறெங்கும் பார்க்க முடியாதென்பர்.
ஆவுடையார் கோவில் கொடுங்கையும், திருநனிபள்ளி கோடிவட்டமும், திருவலஞ்சுழி பலகணியும், திருவீழிமிழலை வெளவாநெத்தி மண்டபமும் சிறந்த வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுபவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.