அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (கீழ பரசலூர்)

God Name : மூலவர்: ஸ்ரீ வீரட்டேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ அகோர வீரபத்ரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

யாகங்களின் தலைவனான சிவபெருமானை புறக்கணித்து விட்டு தட்சப்பிரஜாபதி, பெரிய யாகம் ஒன்றை செய்தான். எடுத்துக் கூறிய ததீசி முனிவர் மற்றும் நந்தியின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக யாகத்தை தொடர்ந்தான் தட்சன். இதை தடுக்க வந்த தாட்சாயிணியும் அவமானப்படுத்தப்பட்டாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் கோபாக்னியிலிருந்து தோன்றிய வீரபத்ரர் (மஹா அஸ்திரத் தேவர்) யாகசாலைக்கு வந்து, சிவனுக்குரிய அவிர்பாகத்தை தரும்படி கோரினார். அதை தர மறுத்தான் தட்சன். ருத்ர மூர்த்தியானார் வீரபத்ரர். யாகசாலைக்கு வந்திருந்தவர்கள் பயந்து ஓடினார்கள். அனைவரையும் விரட்டிய வீரபத்ரர் மீது, சக்ராயுதம் வீசினார் விஷ்ணு. அதை பறித்து பதக்கமாக்கி தனது மார்பில் அணிந்து கொண்டார் வீரபத்ரர். பகன் எனும் சூரியனுக்கு கண்கள் பறி போயின. பூஷன் எனும் சூரியனுக்கு பற்கள் உடைந்தன. யமனின் கால்கள் வெட்டுப்பட்டன. நிருதி மற்றும் வருணன் இருவரது தோலும் கிழிபட்டன. இந்திரன் குயில் வடிவம் எடுத்து தப்பி ஓடி விட்டான். யாகசாலை முழுவதையும் அழித்து, பின்னர் தட்சனது தலையை வெட்டி வீழ்த்தினார் வீரபத்ரர். பார்வதி-பரமேஸ்வரன் ரிஷபாரூடராக தோன்றினார். எஞ்சி நின்றவர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர். எல்லோருக்கும் மீண்டும் உயிர் வரச் செய்தார் சிவபெருமான். யாகப்பசுவாக நின்ற செம்மறி ஆட்டின் தலையை வெட்டி தட்சனின் உடலில் பொருத்தி, அவனை உயிர்ப்பித்தார் வீரபத்ரர். தட்சனை சம்ஹாரம் செய்ததால் இத்தலத்திற்கு தட்சபுரி என்றும் இறைவனுக்கு தட்சபுரீஸ்வரர் என்றும் பெயர் வந்தன. தட்சன் யாகம் செய்த யாகக் குண்டம் இருந்த இடத்தில், இப்போது திருக்குளம் உள்ளது. உத்திரவேதி தீர்த்தம் என்று பெயர். தேவாரத் திருத்தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று.
மூலவர்: ஸ்ரீ வீரட்டேஸ்வரர், வீரட்டானர்: ஸ்ரீ அகோர வீரபத்ரர், அம்பாள்: இளங்கொம்பனையாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் வீரட்டேஸ்வரர். சதுர ஆவுடையார். சுயம்பு மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி. தட்சபுரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மஹா மண்டபத்தின் வடக்கில், தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் இளங்கொம்பனையாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். வாலாம்பாள் என்றும் அழைப்பர். ஸ்ரீ அகோர வீரபத்ரர் - யாக சம்ஹார மூர்த்தி - பேரெழில் கொண்ட விக்ரஹம். சிரசில் அழல் முடி பிரகாசிக்க, கோபம் கொண்ட விழிகள் சிவந்திருக்க, கோரைப் பற்கள் துருத்திக் கொண்டிருக்க, அஷ்ட புஜங்களும் கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். மழு, சூலம், கதை, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகியன ஏந்திய கரங்கள். காலடியில் தட்சன். பீடத்திலுள்ள அலங்கார முகப்புத் தட்டில் ஸ்தல வரலாறு தொடர்புடைய சிற்பங்கள் புடைப்பு சிற்பங்களாக காணப்படுகின்றன. மூலவரின் சந்நிதியின் முன்பாக செங்கழுநீர் விநாயகர், உள்ளே நர்த்தன விநாயகர், மயில் மீது கால் ஊன்றி நிற்கும் சுப்ரமண்யர், மற்றும் கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம். சூரியனுக்கு தனி சந்நிதி. சிவ சூரியன், க்ஷேத்ர பாலகர், காசி விஸ்வநாதர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். இங்குள்ள பைரவருக்கு விசேஷ அர்த்த ஜாம பூஜை நடத்துவார்கள். தட்சன் தனது பரிவாரத்துடன் பூஜை செய்யும் காட்சி கருவறையின் தெற்கு சுவரில் புடைப்பு சிற்பமாக அழகுற சித்தரிக்கப்பட்டுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.