அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் (திருக்கடையூர்)
God Name : மூலவர்: அமிர்தகடேஸ்வரர்் விசேஷ மூர்த்தி: கால சம்ஹார மூர்த்தி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற தேவர்கள், அதை ஒரு குடத்தில் நிரப்பிக்கொண்டு செல்லும் வழியில், ்
ஒரு குளக்கரையில் குடத்தை வைத்து விட்டு நீராட சென்றனர். நீராடி முடித்து பின்னர் அதை எடுக்க முற்பட்டபோது, ்
குடம் பு+மியில் பதிந்து விட்டது. குடத்துக்குள்ளிருந்த அமுதம் லிங்கமாக உருப்பெற்று, பு+மியில் ஸ்தாபனமாகிவிட்டது. ்
அமுதத்திலிருந்து தோன்றிய ஈஸ்வரன் அமிர்தகடேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
கடம் வைத்த இடமாதலால் கடவு+ர் எனப் பெயர் கொண்டது. ஊழிக் காலத்தை கடந்து நிற்பதாலும், கால பயத்தை ்
கடக்க உதவுவதாலும் கடவு+ர் எனப் பெயர் பெற்றதாக கூறுவர். யம வாதனையை கடத்தற்குரிய ஊர் என்பதாலும் ்
கடவு+ர் எனப்படுவதாக கூறுவர்.
கௌசிக முனிவரின் புதல்வனான ம்ருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்துவதியும், புத்ரபாக்யம் வேண்டி ்
தவமிருந்தனர். ப்ரம்மனின் கணக்குப்படி16 வயது வரை மட்டுமே வாழக்கூடிய புத்திரனைப் பெற்றனர். மார்க்கண்டேயன் ்
எனப் பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்து சிவபெருமானின் பக்தனாக இருந்தான். 16 வயது பு+ர்த்தியாகும் தருணத்தில் ்
அவன் உயிரைக் கவர யமன் வந்தான்.
ஸ்ரீ சந்திரசேகராஷ்டகம் பாடிக் கொண்டே சிவபு+ஜையில் யமன் பாசத்தை வீசினான்.
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக் கொண்டான். சிவலிங்கத்துடன் சேர்த்து மார்க்கண்டேயனை இழுத்தது யமனின் ்
பாசக் கயிறு . லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் யமனை காலால்் உதைத்து தள்ளி சூலத்தால் அழுத்தி நின்றார்.
இவரே கால சம்ஹார மூர்த்தி .
காலத்தை கணக்கிட்டு உயிர்களை எடுத்துச் செல்லும் பதவியில் நியமிக்கப்பட்டிருந்ததால் யமனுக்கு காலன் என்றொரு ்
பெயர். விநாடிக்கு விநாடி இறந்து கொண்டிருப்பது காலம். அந்த காலத்தையும் காலனையும் சம்ஹாரம் செய்ததால் ்
இவரை கால சம்ஹார மூர்த்தி எனப் போற்றுகின்றனர்.
கால சம்ஹார திருவிழா - 18 நாட்கள் சித்திரை (ஏப்ரல் - மே) மாசத்தில் நடைபெறும். இத்திருவிழாவின் 6ம் நாள் அன்று
கால சம்ஹார தாண்டவமும், யமனை அழிப்பதும், பின்னர் அருள் புரிவதும் ஐதீகக் காட்சிகளாக நடத்திக் காட்டுவர். ்
அன்றைய தினம் கால சம்ஹாரர், பஞ்ச மூர்த்திகள், மார்க்கண்டேயர் ஆகியோரின் உலாத் திருமேனிகள் உலா வரும்
காட்சியைக் காண அனைவரும் திரண்டு வருவர்.
சிவ பு+ஜையிலிருந்தவன் மீது பாசக்கயிறு வீசியது தவறு என்பதை உணர்த்தி, கடமையை செய்ய யமன் வந்ததால் அவனை ்
மன்னித்து உயிர்பிச்சை கொடுத்தார். மார்க்கண்டேயனுக்கு சாகாவரமாக என்றும் 16 எனும் வரம் அளித்தார். பின்னர் ்
லிங்கத்திற்குள் மறைந்தார் என ஸ்தல வரலாறு.
ஞான உபதேசம் பெற விரும்பிய ப்ரம்மனிடம், ஒரு வில்வ விதையைத் தந்து இதை நட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எங்கு ்
முளைக்கிறதோ - அங்கு வந்து வழிபட்டு ஞான உபதேசம் பெறுவாயாக என சிவபெருமான் கூறி விடுகின்றார். ்
அவ்வண்ணமே இத்தலத்தில் நடைபெற்றதால், ப்ரம்மன் இத்தலத்தில் ஞான உபதேசம் பெற்றார் என வரலாறு. ்
அவ்விறைவனே ஆதிமூர்த்தியான வில்வவனேஸ்வரர்.
தஞ்சையை ஆண்ட அரசர் ஒருவரிடம் அபிராமி பட்டரை, ஊர் மக்கள் அறிமுகம் செய்து வைத்தனர். (இயற்பெயர் ்
சுப்ரமண்யர் - சரபோஜி மன்னரே அவருக்கு அபிராமி பட்டர் எனும் பெயர் சூட்டியதாக குறிப்பொன்று கூறுகின்றது). ்
அன்று அமாவாசை எத்தனை நாழிகையுள்ளது? என அரசர் கேட்கஅபிராமி பட்டரோ அன்று பௌர்ணமி என்று ்
கூறி விடுகின்றார். ்
தன் பிழையை உணர்ந்த அபிராமி பட்டர் அம்பாள் சந்நிதி சென்று தமது வாக்கை மெய்ப்பிக்கும்படி வேண்டுகிறார். ்
கீழே தீ மூட்டி அதன் மீது உறியைத் தொங்க விட்டு அதன் மேல் அபிராமி பட்டரை ஏற்றுகிறான் அரசன். தீயின் ்
மீதிருந்தபடியே அந்தாதி பாடுகிறார் பட்டர். தன் பக்தனை காப்பாற்ற தனது காதுகளின் தாடங்கத்தை (தோடுகளை) ்
கழற்றி வீசுகிறாள் அபிராமி. பு+ரண சந்திரன் தோன்றி அமாவாசை தினம் பௌர்ணமியானது.
தை மாச அமாவாசையன்று - அபிராமி தன் காது தோட்டை ஆகாயத்தில் விட்டெறிந்து  ்பு+ரண சந்திரனை வரவழைத்த ்
காட்சியையும், பட்டர் அந்தாதி பாடும் காட்சியையும் ஐதீகமாக நடத்திக் காட்டுகின்றனர்.
குங்கிலியக் கலய நாயனார் மற்றும் காரி நாயனார் தோன்றிய ஸ்தலம்.
இது ஒரு நித்ய அனுக்ரஹ ஸ்தலமாக கருதப்படுகின்றது.
சக்தி பீடங்களுள் ஒன்று - கால பீடம்  ்-  ்தேவாரத் திருத்தலம் - அஷ்ட  ்வீரட்டானங்களுள் ஒன்று ்
விநாயகரின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது .
மூலவர்: அமிர்தகடேஸ்வரர், ்விசேஷ மூர்த்தி: கால சம்ஹார மூர்த்தி, அம்பாள்: அபிராமி  ் ்
கள்ள வாரணப் பிள்ளையார் எனப்படும் அமுத விநாயகரை முதலில் தரிசித்து அவரது ஆசி பெற்று ஆலய சுற்றைத்
தொடங்க வேண்டும். தன்னை வணங்காது செயல்பட்ட தேவர்களிடம் விளையாடியவர். அமிர்த கடத்தை ஒளித்து  ்
வைத்தவர் . இதனால் கள்ள வாரணப் பிள்ளையார் என்றப் பெயரைக் கொண்டார். (வாரணம் - என்றால் யானை)
விநாயகரின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது  ்படைவீடு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் பாலிப்பவர் மூலவரான அமிர்தகடேஸ்வரர். கம்பீரமான ்
தோற்றம். தேஜோமயத் திருமேனி. திருமேனியில் பிளவும், பாசக்கயிறு கட்டி இழுத்த தழும்பும், மார்க்கண்டேயன் ்
லிங்கத்தைக் கட்டிக் கொண்ட அடையாளமும் தெரிகின்றன. (அபிஷேகத்தின்போது தௌிவாக தெரியும்) ்
மேற்கு பார்த்த சந்நிதி.
சந்நிதிக்கு முன்பாக உள்ள சங்கு மண்டபத்தில், கார்த்திகை சோம வாரங்களில், 1008 சங்குகளும் நடுவே வலம்புரி ்
சங்கும் வைத்துக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றி வருவார்கள். பின்னர் சங்குகளிலுள்ள நீரைக் கொண்டு இறைவனுக்கு ்
அபிஷேகம் செய்வார்கள். மார்க்கண்டேயர் சங்காபிஷேகம் செய்த வழக்கையொட்டி ஐதீகமாக இதனை செய்கின்றனர். ்
மஹா மண்டபத்து வடக்கேயுள்ள மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிகப் பெரிய திருமேனி. ்
சூலம், பாசம், மழு, முத்திரை ஆகியன கொண்ட சதுர்புஜங்களுடனும், ரௌத்ரம் தாண்டவமாடும் முகத்துடனும், ்
லிங்கத்திலிருந்து திடீரென எழுந்த பாவத்துடனும் தெற்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார். இடப்பாதம் தூக்கிய ்
திருவடி, இதுவே காலனை உதைத்த திருவடி. பக்கத்தில் வெள்ளிப்பேழையில் மரகத லிங்கம் தரிசிக்கலாம்.
வலப்பக்கம் கூப்பிய கரங்களுடன் மார்க்கண்டேயரும், இடப்பக்கம் இறைவி பாலாம்பிகையும் தரிசனம் தருகின்றனர்.
உதைபட்ட யமன் கீழே விழுந்து கிடப்பதும், சிவபு+தம் ஒன்று அவனை கயிறு கட்டி இழுத்து அப்புறப்படுத்துவதும், ்
காட்சியாக பீடத்தின் கீழே உள்ளது - வெள்ளித் தட்டால் மறைக்கப்பட்டுள்ளது. (தீபாராதனை செய்யும்போது ்
திறந்து காட்டுகிறார்கள்).
நேர் எதிரே அனுக்ரஹம் பெற்ற யமதர்மன் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி. தலையைச் சுற்றி ்
அக்னி பிழம்பு. அருகே எருமைக்கடா வாகனம் .
சிவ கோஷ்டத்து மூர்த்தங்களையும், பிரகார வலச்சுற்றில் எண்ணற்ற மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். முதல்
பிரகாரத்தின்
வழிபடப்பட்ட ஆதிமூர்த்தி இவரே ஆவார். அகஸ்தியரால் வழிபடப்பட்ட பாபஹரேஸ்வரர், மற்றும் புலஸ்தியரால்
வழிபடப்பட்ட  ்புண்ணியவர்த்தன நாதர் ஆகிய லிங்க மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
தனிக்கோவில் கொண்டுள்ளார் அன்னை அபிராமி. அபிராமம் என்றால் அழகு. அழகே உருவாக, அலங்கார
பு+ஷிதையாக காட்சி தரும் அபிராமியின் சந்நிதியை விட்டு அகல மனம் வரவில்லை.
மேற்கரங்களில் ஜபமாலையும் தாமரையும் கொண்டும், கீழ்க்கரங்களில் அபய-வரத முத்திரைகள் கொண்டும், ்
கருணை பொழியும் கண்களுடனும், கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில்  ்தரிசனம் தருகின்றாள் அன்னை. ்
காதுகளில் ஒளிரும் ஸ்ரீ சக்கரத் தாடகங்கள் (தோடுகள்) மேலும் அழகு சேர்க்கின்றன.
சக்தி பீடங்களுள் இது கால பீடம் - அபிராமியே அமிர்த கௌரி ஆவாள். ஷோடஸ கௌரிகளுள் ஒருவளே ்
அமிர்த கௌரி. கடக மாசத்தில் இவளை வழிபட்டால் - வம்ச விருத்தி, ஆயுள் விருத்தி உண்டாகின்றன.
சாயரட்சை பு+ஜையின்போது சாம்பிராணி -அகில் கமழ, ஷோடஸ உபச்சாரத்துடன் - செண்டை, கொம்பு, ்
கோல், சங்கு, நாதஸ்வரம் ஒலிக்க, அற்புதமான தரிசனம் - பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹா,  ்தீப மங்கள கர்ப்பு+ர நீராஞ்சனம் தர்சயாமி
அம்ருத புஷ்கரிணி கோவிலுக்கு கிழக்கே இருக்கின்றது. கால தீர்த்தம் எனும் ஆனைக்குளமும் உள்ளது.
வீரட்டானருக்கு அபிஷேக நீர்் தினமும் கடவு+ர் மயானத்திலிருந்து காசி தீர்த்தத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.