அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், பெரம்பூர்

God Name : மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: ஆறுமுகப் பெருமான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சூரபத்மன் சாப விமோசனம் அடைந்து, மயில் உருவம் பெற்று, பின்னர் ஆறுமுகப் பெருமானின் வாகனமாகி, முருகனை பூஜித்து, ஞான உபதேசம் பெற்ற ஸ்தலம். இங்குள்ள மூலவரை பிரம்மன் பூஜித்ததால் இவருக்கு பிரம்மபுரீஸ்வரர் என்று பெயர். இந்த சிவலிங்கம் தாருகாவனத்து மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பிரம்மன், சிவ அபராதம் நீங்கப் பெற இவரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு. முருகப் பெருமான் போர் முடித்து வரும்போது இவ்விறைவனை வணங்கியதாக ஸ்தல வரலாறு. முருகன் கோவில் என்றே ஊர் மக்கள் அழைக்கின்றனர்.
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி, சிறப்பு மூர்த்தம்: ஆறுமுகப் பெருமான். மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மிகுந்த வரப்பிரசாதி. ஆறு திருமுகங்களுடனும் பன்னிரண்டு கரங்களுடனும் மயில் மீதமர்ந்த அழகனாக காட்சி தருகின்றார். வள்ளி-தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். முன் மண்டபத்தில் விநாயகரையும் இடும்பனையும் தரிசிக்கலாம். மூலவரான பிரம்மபுரீஸ்வரர் சிவலிங்க வடிவனராக எழுந்தருளியுள்ளார். அம்பாள் திரிபுரசுந்தரி அழகான திருவுருவம். கோஷ்ட தெய்வங்கள் யாவும் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.