அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
God Name : மூலவர்: வீரட்டேஸ்வரர்் வீரட்டானர்: கஜசம்ஹாரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
யாகத்தை தவிர வேறு தெய்வம் ஏதுமில்லை - வேள்வியினால் எதையும் சாதிக்கலாம் என்ற மமதையில் இருந்த தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்துவதற்காக சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் வேடம் பூண்டு தாருகாவனத்தை நோக்கி புறப்பட்டனர்.
திகம்பரராக திருமேனி கொண்டு ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் வந்த பிட்சாடனரின் பேரழகையும் வாலிப வனப்பையும் பார்த்து மயங்கிய ரிஷி பத்தினிகள் அவரை பின் தொடர்ந்தனர். மோகினி வடிவத்திலிருந்த திருமால், ரிஷிகளின் யாகசாலை பக்கமாக சென்று ஆடிப்பாடினார்.
நாங்கள் தவம் செய்யும் இடத்திற்கு ஏன் வந்தீர்கள்? என ரிஷிகள் கோபத்துடன் வினவ, நானும் என் மனைவியுடன் தவம் செய்யவே வந்தேன் என வேடிக்கையாக கூறினார் திகம்பரர். மற்றவர்களை மயக்கி ஆடிப்பாடுவது தான் உங்கள் லட்சணமா என்று கேட்ட ரிஷிகளைப் பார்த்து - யாக கார்யங்களை விட்டு விட்டு எங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் மனைவிமார்களும் அடக்கமில்லாதவர்கள் என்று அவர்களின் தவறுகளை சுட்டிக் காண்பித்தார் திகம்பரர்.
தாங்களும் தங்களது மனைவிமார்களும் கேலிக்கு உள்ளானதால் அவமானம் கொண்ட ரிஷிகள் கோபம் கொண்டு, உக்ர மயமான மந்திரங்களை ஓதி அபிசார வேள்வி செய்தனர். அதிலிருந்து புறப்பட்டு சுழன்று வந்த நெருப்பு கோளத்தை பெருமான் தனது இடது கரத்தில் ஏந்திக் கொண்டார். அடுத்து ஏவப்பட்ட பாம்புக் கூட்டத்தை அணிகலன்களாக ஏற்றுக் கொண்டார். பின்னர் வந்த புலியை அழித்து சார்த்தூலஹரர் எனப் பெயர் கொண்டார்.
வலிமையான பூதத்தை அவர்கள் ஏவ, அதை ஏவலனாக்கிக் கொண்டார். குட்டையான பூதம் ஒன்று கிளம்பி வர (முயலகன்) அதை திருவடியின் கீழ் அமர்த்தி நடனமாடினார். கடைசியாக வந்த முரட்டு யானையை, அணிமா சித்து மூலமாக அதன் உடலுள் புகுந்து, அதன் தோலைக் கிழித்து, உரித்து போர்த்திக் கொண்டார்.
வழுவை என்பதற்கு யானை என்று ஒரு பொருள் உள்ளது. வழுவை (யானையை) உரித்த ஊர் என்பதால் வழுவூர் என்றானது.
தேவார வைப்புத் தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று
மூலவர்: வீரட்டேஸ்வரர், வீரட்டானர்: கஜசம்ஹாரர், அம்பாள்: இளங்கிளை நாயகி எனப்படும் பாலகுஜாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் வீரட்டேஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். கம்பீரமாக காட்சி தரும் தேஜோ மய லிங்கம். அஷ்ட வீரட்டானங்களை சேர்ந்த மூலவர்கள் வீரச் செயல்களை நிகழ்த்துபவர்கள் என்பதால் வீரட்டேஸ்வரர் என்றே பெயர்.
மஹா மண்டபத்தின் வடக்கே வீரட்டகாச சபை உள்ளது. இதில் கஜ சம்ஹார மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவருக்கு எட்டுக் கரங்கள். மேல் இரண்டு கரங்கள் யானைத் தோலை விரித்து பிடித்தபடியும், முன் இரு கரங்களில் நீண்ட சூலமும், கபாலமும் கொண்டும் காட்சி தருகின்றார். மற்ற நான்கு கரங்களில் - பாம்பு, வாள், கேடயம், உடுக்கை ஆகியன உள்ளன.
உரிக்கப்பட்ட யானையின் தலையும் முன்னிரண்டு கால்களும் பீடத்தில் உள்ளன. பின்னிரண்டு கால்களும், வாலும் மேலே உள்ளன. யானைத் தோல் பிரபாவளியுடன் இணைந்துள்ளது. பின் கால்கள் மேலேயும் முன் கால்கள் பக்கவாட்டிலும் காட்டப்பட்டுள்ளன.
கஜசம்ஹாரரின் சிரசில் விரித்த ஜடாமுடியும் - அதில் கங்கையும், இளம்பிறையும் இடம் பெற்றுள்ளன.
வலக் கால் யானையின் தலை மீது ஊன்றியிருக்க, இடக் காலை முழங்கால் வரை உயர்த்தியுள்ளார். உள்ளங்கால் அழகாக தெரிகின்றது. அதற்கு கல் பதித்த கவசம் அணிவித்துள்ளனர். வேறு எங்கும் காணக் கிடைக்காத உள்ளங்கால் தரிசனம் பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும் அழகு.
இவருக்கு கிருத்திவாசர் என்ற திருநாமமும் உண்டு. கிருத்தி என்றால் யானையின் தோலை உரித்து போர்த்திக் கொண்டவர் என்பதால், கஜ சம்ஹாரம் செய்து யானையின் தோலைப் போர்த்திக் கொண்டதால் இந்தப் பெயர் கொண்டார்.
இவருக்கு பின்புறம் பெரிய சக்கரம் அபிசார யந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. முன்புறமாக வைக்கப்பட்டுள்ள பேழையில் ஸ்படிக லிங்கம் இருக்கின்றது. நித்ய அபிஷேகம் செய்கின்றனர்.
கஜசம்ஹாரரின் இடப்புறமாக கிருபாநாயகி எனும் அம்பிகை தரிசனம் தருகின்றாள். அச்சத்துடன் விலகி செல்லும் பாவனையில் காட்சி. இடுப்பில் குழந்தை முருகன். சிவபெருமானின் மகேஸ்வர மூர்த்தங்களில் சோமாஸ்கந்தரும், கஜசம்ஹாரரும் மட்டுமே குழந்தை முருகனோடு இருக்கும் உமையவளை உடன் வைத்துள்ளனர்.
அடுத்துள்ள சந்நிதியில் சிவகாமி உடனாய நடராஜரை தரிசிக்கலாம். அடுத்தடுத்து வரும் சந்நிதிகளில் பிட்சாடனர், மோகினி, மற்றும் சாத்தனாரின் உலாத் திருமேனிகளைக் காணலாம்.
பேரழகுடன் விளங்கும் இளங்காளையாக காட்சி தரும் பிட்சாடனரின் எழிற் கோலத்தை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இடது முன் கையில் கபாலமும் (பிட்சா பாத்திரம்) வலது கையில் புல் கற்றையும் வைத்துள்ளார். அந்த புல்லை ஒரு மான் தாவி உண்ணும் பாவனையில் உள்ளது. மேல் வலது கரத்தில் உடுக்கை உள்ளது. மேல் இடது கரம் தோள் மீதுள்ள திரிசூலத்தைப் பற்றியுள்ளது.
திகம்பரராக காட்சி தரும் பெருமான் அரையில் பாம்பை சுற்றியுள்ளார். கைகளில் கங்கணமும் கால்களில் வீரக்கழல், சிலம்பு போன்றவை அலங்கரிக்க பாதக்குறடுகள் அணிந்து காட்சி தருகின்றார். தலை மீது தட்டை சுமந்துள்ள குண்டோதரன் எனும் பூதம், இவரது இடது கைக்கு கீழாக நிற்கின்றது.
காண்பவர்களை மயங்க செய்யும் அழகுடன் காணப்படுகின்ற மோகினியின் விக்ரஹம் அற்பதமாக உள்ளது.
பிரகார வலச்சுற்றில் விநாயகர், சுப்ரமண்யர், பங்கமூர்த்திகள், சூரியன், பைரவர், அறுபத்திமூவர் மற்றும் நால்வரை தரிசிக்கலாம். வில்லேந்திய சனீஸ்வரரும், சஹஸ்ர லிங்கமும் வித்தியாசமானவை.
இங்கு எழுந்தருளியிருக்கும் அம்பாள் இளங்கிளை நாயகி மிகுந்த வரப்பிரசாதி. பாலகுஜாம்பிகை என்றும் அழைப்பார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.