அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (நெய்க்குப்பை)
God Name : சுந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
அருகேயுள்ள பந்தணைநல்லூரில் அம்பிகை பசு உருவம் கொண்டு, லிங்கத்தின் மீது பால் பொழிந்து வழிபட்டாள்.
அந்தப் பால் இவ்வூரை அடைந்து தேங்கி நின்று நெய்யாக மாறி நெய்க்கூபம் எனப் பெயர்கொண்டது. அதுவே தற்போது மருவி நெய்க்குப்பை என்றானது. தேவி நெய் கொண்டு இறைவனை அபிஷேகித்ததாகக் கூறுவர்.
சூரிய பகவான் இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இவ்வூரின் மற்றொரு சிவாலயமான சோழீஸ்வரர் ஆலயத்தில் சோழீஸ்வரரும், தோளியம்மையும் எழுந்தருளி அருள்புரிகின்றனர். ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் அறுவடை அமோகம் என விவசாயப் பெருமக்கள் கூறுகின்றனர்.
மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: சௌந்தர நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுந்தரேஸ்வரர். தேஜோமயத் திருமேனி. ஆவணி மாதத்தில் 19, 20, 21 ஆகிய நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் சௌந்தர நாயகி பெயருக்கேற்றார் போல் சௌந்தர்யமாகக் காட்சி தருகின்றார். மும்மூர்த்தி விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் அழகான திருவுருவங்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.