அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் (வாணாதிராஜபுரம்)

God Name : மூலவர்: ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், சிறப்பு மூர்த்தம்: சந்தான ராமர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

லட்சுமி நாராயணப் பெருமாளின் திருவுருவச் சிலையை, ஓர் மாட்டு வண்டியில் வைத்துக் கொண்டு, இந்தளூரை நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். இவ்வூர் அருகே வரும்போது, வண்டியின் அச்சு முறிந்து மாட்டு வண்டி இங்கேயே நின்று விட்டது. வண்டியை பழுது பார்த்து சரி செய்து மீண்டும் பயணிக்க முற்படுகையில், வண்டியை இங்கிருந்து நகர்த்தக் கூட முடியவில்லை. பெருமாள் இங்கேயே கோவில் கொள்ள தீர்மானித்து விட்டார் என கருதிய ஊர் மக்கள், இங்கேயே பிரதிஷ்டை செய்து விட்டனர். இப்படியாக வந்தவரே இரண்டாவது மூலவர் என கிராம மக்களும் பட்டாச்சாரியாரும் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் நிலத்தை உழும்போது கிடைத்த பஞ்சலோக விக்ரகங்களை முன் மண்டபத்தில் வைத்துள்ளனர். பாணாசுரன் என்பவன் இங்கு ஏழு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தான் என்றும், அதன் காரணமாக பாணாதிராஜபுரம் என இவ்வூருக்கு பெயர் வந்ததாகவும் செவி வழி கதை ஒன்றும் வழக்கிலுள்ளது. தற்போது வாணாதிராஜபுரம் என்றே அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் மூலவராக சேவை சாதிக்கின்றார். மிகப் பெரிய திருமேனி. மற்றொரு மூலவராக ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள், சிறிய திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார். மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். ருக்மணி-சத்யபாமா சஹிதமாக ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் உற்சவ மூர்த்தமாக சேவை சாதிக்கின்றனர். குழந்தை வடிவில் ராம்லாலா விக்ரகமாக தரிசனம் தருகின்றார். கையில் சிறிய பொம்மை வில்-அம்புடன் தொட்டிலில் படுத்திருக்கின்றார். இவருக்கு சந்தான ராமர் என்ற பெயர். இது போன்ற சிறிய விக்ரகம் வேறு எங்கும் பார்க்க முடியாது. இவரை விட சிறிய வடிவில் காட்சி தரும் ஆஞ்சநேயர் விக்ரகம் அழகாக உள்ளது. முன் மண்டபத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், சிவகாமசுந்தரி உடனாய நடராஜர், சோமாஸ்கந்தர், அம்பாள் ஆகிய பஞ்சலோக விக்ரகங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.