அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோவில் (திருத்துருத்தி - குத்தாலம்)
God Name : ஸ்ரீ சோழீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
யாகங்கள் நடத்தும்போது அக்னி பகவானைப் போற்றுகின்றவர்களே, நெருப்பினால் பொருட்கள் எரிந்து அழியும்போது தூற்றுகின்றனர். இந்தப் பழி பாவத்திலிருந்து விடுபட, இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார் அக்னி தேவன். தாமே அக்னி ஸ்வரூபம் என்றும், நடக்கும் நன்மை தீமைகளுக்குத் தாமே காரணகர்த்தா என்றும் கூறி அவரை சமாதானப்படுத்துகிறார் சிவபெருமான்.
இப்பகுதியை ஆண்ட விக்ரம சோழனின் மனைவிக்கு உண்டான தோல் நோயைக் குணப்படுத்திய இறைவன் என்பதால் சோழீஸ்வரர் என்ற பெயரும், அக்னி ஸ்வரூபமாகவே எழுந்தருளியிருப்பதால் அக்னீஸ்வரர் என்ற பெயரும் கொண்டார்.
உஷ்ண சம்பந்தப்பட்ட நோயுற்றவர்களும், தீ விபத்திற்குள்ளானவர்களும், இவ்விறைவனை வழிபட்டு பூரண நலன் பெறுகின்றனர். தோல் நோயால் பாதிப்படைந்தவர்கள், ஸ்வாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பாதாள சனீஸ்வரருக்கு, 12 நல்லெண்ணெய் தீபமேற்றி, 12 முறை வலம் வந்து, 12 நமஸ்காரங்கள் செய்தால் கஷ்டங்கள் யாவும் விலகும்.
வைகாசி பௌர்ணமி மற்றும் மாசி மக நாட்களில் சோழீஸ்வரரை தரிசிப்பது விசேஷ பலன்களைத் தரும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
சுந்தரரின் பாடலை வைப்புத் தலமாகக் கொண்ட ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம்
மூலவர்: ஸ்ரீ சோழீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சௌந்தர நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சோழீஸ்வரர். இவருக்கு அக்னீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. தேஜோமயமான அழகிய திருமேனி. அக்னி தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவர். பெயருக்கு ஏற்றார் போல அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகிறாள் ஸ்ரீ சௌந்தர நாயகி. இடது கையை இடுப்பில் இருத்தி ஆனந்த கோலத்தில் காட்சி தருகிறாள். சிலையில் மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஸ்வாமி சந்நிதி கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. கரங்களில் தாமரை மலருடன் சிவபூஜை செய்யும் ஆஞ்சநேயரின் சிலை ஒன்று மிகவும் அழகாக இருக்கின்றது.
இவ்வாலயத்திலுள்ள பாதாள சனீஸ்வரர் மிகுந்த வரப்பிரசாதி. சுயம்புவானவர். கையில் அமிர்த கலசம் வைத்திருப்பதால் அமிர்த கலச சனீஸ்வரர் என்றும் பெயர் உண்டு.
15 அடி ஆழம் வரை தோண்டியும் பீடத்தின் அடிப்பகுதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதாள சனீஸ்வரருக்கு, 12 நல்லெண்ணெய் தீபமேற்றி, 12 முறை வலம் வந்து, 12 நமஸ்காரங்கள் செய்தால் கஷ்டங்கள் யாவும் விலகும் என்கிறார் அர்ச்சகர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.