அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில் (திருவேள்விக்குடி)

God Name : மணவாளேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

திருமணத்திற்கான கங்கணம் கட்டிக்கொண்டு, விரதம் எனும் வேள்வி நடைபெற்ற இடம் என்பதால் இவ்வூர் வேள்விக்குடி என பெயர் பெற்றது. அம்பிகைக்கு கங்கணதாரணம் செய்த இடம் என்பதால் கௌதுகாபந்தன க்ஷேத்ரம் என்றும் இறைவனுக்கு கௌதுகேசன் எனவும் பெயர் வழங்கலாயிற்று. திருமணத்திற்கு முன்பு தேவி மங்கள ஸ்நானம் செய்த கௌதுகாபந்தன தீர்த்தம் சந்நிதிக்கு வடகிழக்கு மூலையிலுள்ளது. இவ்விடத்தில் பின்னர் மயனை அழைத்து கோவிலை அமைக்க செய்தனர் என்றும் ஸ்தல வரலாறு மேலும் கூறுகின்றது. அரசகுமாரன் ஒருவனுக்கு மணம் செய்து வைக்க நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் - தந்தையர் இறந்துவிடவே, அப்பெண்ணின் உறவினர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கல்யாணத்தை அவர்கள் தடுத்ததால், அரசகுமாரன் இவ்விறைவனை வேண்டி நின்றான். பக்தனின் பொருட்டு பூதகணங்களை அனுப்பி, பெண்ணை கைப்பற்றி வந்து, திருமணத்தை நடத்தி வைத்து, பின்னர் கல்யாண கோலத்தில் காட்சி தந்து ஆசிர்வதித்தார் இறைவன் என ஸ்தல வரலாறு. முதலாம் பராந்தக சோழன் இக்கோவிலை கற்றளியாக கட்டியதாக சாஸனங்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்தின் ஆதி இரட்டை விநாயகர் எனப் போற்றப்படும் சங்கல்ப இரட்டை விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை செய்து வைத்து, தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர்கள் ஒன்று சேர வேண்டுமென பிரார்த்தித்ததாக கூறப்படுகிறது. தேவார வைப்புத்தலம்
மூலவர்: மணவாளேஸ்வரர், அம்பாள்: பரிமள சுகந்த நாயகி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியிருப்பவர் மணவாளேஸ்வரர். ஒளி வீசும் திருமேனி. உற்சவ மூர்த்தி பேரெழிலுடன் விளங்குகிறது. கிழக்கு பார்த்த சந்நிதி. முதல் பிரகாரத்தின் வடகீழ் பகுதியில் அம்பாள் பரிமள சுகந்த நாயகி தெற்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அழகே உருவாக அலங்கார பூஷிதையாக திகழும் அம்பாளை காணக் கண் கோடி வேண்டும். நாறுசாந்து இளமுலை அரிவை என ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். அம்பாள் சந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கியுள்ள சந்நிதியில் வேள்விக்குடி உடையார் எனும் ஆதி இறைவன் எழுந்தருளியுள்ளார். தென்மேற்கு மூலையில் வலம்புரி விநாயகரை தரிசிக்கலாம். உட்பிரகாரத்தில் உள்ள சந்நிதியில் மணக் கோலத்தில் காட்சி தரும் கல்யாணசுந்தரர் மிகவும் அழகாக இருக்கின்றார். இங்குள்ள கல்யாணசுந்தரர் திருமணஞ்சேரியில் இருப்பவரை விட பெரிய திருமேனி. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அகஸ்தியர் ஆகியோரின் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. ஆதி இரட்டை விநாயகர் எனப்படும் சங்கல்ப இரட்டை விநாயகர் சந்நிதி சாந்தித்யம் மிகுந்தது. மகிஷத்தின் மீது நின்ற கோலத்தில் தரிசனம் தரும் அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை, பிட்சாடனர் ஆகிய மூர்த்தங்கள் அவசியம் தரிசிக்க வேண்டியவை. ஸ்தம்ப விநாயகரையும், ராமர் - சீதை, லட்சுமணர், ஹனுமன் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.