அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் (எதிர்கொள்பாடி - மேலக்கோவில்)
God Name : ஐராவதேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பரத முனிவர், வேள்விக்குடியில் கங்கணதாரணம் முடித்த தனது மகளையும், மருமகனையும் தான் குடியிருக்கும் இவ்வூருக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று வருகை தந்த தம்பதிகளை, பூரண கும்பத்துடன் பிரமாதமான வரவேற்பு கொடுத்து, எதிர்கொண்டு அழைத்தார் பரத முனிவர். இதனால் இவ்வூர் எதிர்கொள்வாடி எனப் பெயர் கொண்டு, நாளடைவில் எதிர்கொள்பாடி என்றானது.
போரில் வெற்றி கொண்ட இந்திரனைப் பாராட்டி, தான் சிவ பூஜை செய்து வைத்திருந்த மலரினைப் பரிசாகக் கொடுக்கின்றார் துர்வாச முனிவர். அதனுடைய அருமை தெரியாமல் அலட்சியமாக அதனைப் பெற்று, தான் உட்கார்ந்திருந்த ஐராவதத்தின் (யானையின்) தலை மீது வைக்கிறான் இந்திரன். ஐராவதமோ அதைத் தூக்கித் தரையில் எறிந்து தன் காலால் மிதித்தது.
இதைக் கண்ணுற்ற துர்வாசர் கோபம் கொண்டு சபிக்கின்றார். சாபம் கொண்ட இந்திரன் தனது பதவி, பொன், பொருள் யாவும் இழக்கிறான். ஐராவதமான யானை தனது சிறப்புகளை இழந்து பூமிக்கு வந்து அலைந்து திரிகின்றது.
இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டது ஐராவதம். இதனால் இறைவன் ஐராவதேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். இவரை வழிபட்ட இந்திரன், தனது இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஐராவதேஸ்வரர், அம்பாள்: சுகந்த குந்தளாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவ லிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஐராவதேஸ்வரர். "திரு எதிர்கொள்பாடி உடையார்" என கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயம்பு மூர்த்தம். கம்பீரமான பெரிய திருமேனி. மேற்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். "மலர்க்குழல் நாயகி" என்றும் கூறுவர். "பெருங்கருணை பிராட்டியார்" என கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு யானை சுற்றி வரும் அளவிற்கு கருவறை பெரியதாக உள்ளது.
மஹா மண்டபத்தில் பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், நடராஜர், சூரியன், மஹாலட்சுமி ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
பிரகார வலச்சுற்றில் பால கணபதி, துர்க்கை, கான சரஸ்வதி, கங்கா விஸர்ஜனர், பிட்சாடனர், கால பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.