அருள்மிகு அருள்வல்லநாதர் திருக்கோவில் (திருமணஞ்சேரி)

God Name : மூலவர்: ஸ்ரீ உத்வாகநாதர், உற்சவர்: ஸ்ரீ கல்யாண சுந்தரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

இறைவனை மீண்டும் ஒருமுறை மாப்பிள்ளை கோலத்தில் கண்டு அவரை மணக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கோரிக்கையாக முன் வைக்கிறாள் அம்பிகை. அதற்கு கால தாமதம் ஆகும், பொறுத்திரு என்கிறார் இறைவன். இதனால் வருத்தமுற்ற தேவி, இறைவனிடம் சற்று அலட்சியமாக நடந்து கொண்டாள். அவளை சோதிக்க எண்ணிய சிவபெருமான், பொய்க் கோபம் கொள்வதான பாவனையில், தேவியைப் பசுவாக உரு மாறி பூவுலகில் சுற்றித் திரியும்படி சபிக்கிறார். சாபத்தினால் பசு வடிவம் கொண்ட அம்பிகை தனது பயணத்தை தேரெழுந்தூரில் தொடங்கி, ஊர் ஊராகச் சென்று, திருவாவடுதுறையில் சுய உருவம் பெற்று, திருத்துருத்தியில் பரத மகரிஷியின் யாகக் குண்டத்திலிருந்து பெண்ணாக வெளிப்பட்டு, வேள்விக்குடியில் கங்கண தாரணம் கட்டிக் கொண்டு, குறுமுளைப்பாடியில் பாலிகை ஸ்தாபனம் செய்து, திருமணஞ்சேரியில் பூலோக முறைப்படி சாஸ்திர சம்பிரதாயப்படி இறைவனை மணந்து தன்னுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்கிறாள் என ஸ்தல வரலாறு. திருமணஞ்சேரிக்கு வந்து ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரரையும் உமையவளையும் வழிபடுவோர்க்கு திருமணத் தடை நீங்கி சீக்கிரம் திருமணம் நடக்கும் மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திரப் பிராப்தி உண்டாகும். ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள், தங்களுக்குப் பெண்ணும் பிள்ளையும் பிறந்தால் சம்பந்தம் செய்து கொள்வதாக நிச்சயித்து, இவ்விறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டனர். இறைவனருளால் நிச்சயமாகக் குழந்தை பிறக்கும் என ஒருவளும், குழந்தை பிறந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற அவநம்பிக்கையுடன் மற்றவளும் வீடு திரும்பினர். முதல் பெண்ணுக்குப் பெண் குழந்தையும், இரண்டாமவளுக்கு ஆமையும் பிறந்தன. இருவருமாக இறைவன் சந்நிதானத்திற்கு வந்து பிழையைப் பொறுத்து மன்னித்தருளுமாறு வேண்டுகின்றனர். திருக்குளத்தில் ஆமையை மூழ்குமாறு பணிக்கிறார் இறைவன். இறைவனருளால் ஆமை வாலிபனாக மாறியது. திருமணமும் நிச்சயித்தபடி இனிதாக நடந்தது. சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி கொற்கையில் எரிந்து போன மன்மதன், இத்தலத்தில் இவ்விறைவனை வழிபட்டு அருள் பெற்றார் என வரலாறு. சித்திரை மாத பூச நட்சத்திர நாளில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி மூன்று நாட்களுக்கு விமரிசையாக நடக்கும். ஊரே விழாக் கோலம் பூண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடும். இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக வந்த ஏழு கடல்களும் இங்கேயே தங்கி விட்டன. 'சப்த சாகரம்' என்ற பெயரில் இங்கு தீர்த்தமாக உள்ளன. தேவாரத்திருத்தலம்
மூலவர்: ஸ்ரீ உத்வாகநாதர், உற்சவர்: ஸ்ரீ கல்யாண சுந்தரர், அம்பாள்: ஸ்ரீ கோகிலாம்பாள். மூலஸ்தானத்தில் சிவ லிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ உத்வாக நாதர். அழகு தமிழில் 'அருள் வல்ல நாதர்' என்று அழைக்கின்றனர். வினை தீர்க்கும் இறைவன் என்று போற்றுகின்றனர். சுவாமி கோஷ்டத்து மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. தேவ கோஷ்டத்தில் பால கணபதி, பிட்சாடனர், பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, பழையாந்தகர் ஆகிய திருவுருவங்களைத் தரிசிக்கலாம். கவச குண்டலங்களுடன் மனித வடிவில் ராகு கோஷ்டத்தில் இருப்பது வித்தியாசமான ஒன்று. நிருத்த மண்டபத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கிறது. நேரெதிரே உள்ள மண்டபத்தில் சமயக் குரவர்களைக் காணலாம். வலச்சுற்றில் பைரவர், சூரியன், சனீஸ்வரர், பச்சையப்ப நாதர் என்கிற ருத்ரவனேஸ்வரர், பச்சையம்மை எனப் போற்றப்படும் ருத்ரவனேஸ்வரி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். மகா மண்டபத்தின் வடக்கில், தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பிகை கோகிலாம்பாள் எழுந்தருளி தரிசனம் தருகிறாள். 'யாழினும் மென் மொழியாள்' என்ற திருநாமமும் உண்டு. ஒரு மணப்பெண் திருமண மேடையில் அமர்ந்திருப்பதைப் போல, வலக் காலை மடித்து, இடக் காலை தொங்க விட்டுக் கொண்டு சுகாசனத்தில் உட்கார்ந்திருக்கிறாள். மணப்பெண் கோகிலாவிற்கு எட்டு வயது என்றும், மணமகனான சுவாமிக்கு பதினாறு வயது என்றும் அர்ச்சகர் தெரிவிக்கிறார். பிரகாரத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள மண்டபத்தில் ஸ்ரீ கல்யாண சுந்தரர் திருமணக் கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் ஐம்பொன் விக்ரகம். மேற்கரங்களில் மான் - மழு தாங்கி, கீழ் வலது கரம் அம்பிகையின் கரத்தைப் பற்றியும், கீழ் இடதுக் கரம் அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார். வலப்புறமாக நிற்கும் அம்பிகை, தனது வலது கையை, சுவாமி பற்றும் வகையில் நீட்டியும், இடது கையில் மலரை ஏந்தியும் காட்சி தருகிறாள். அம்பிகையின் உள்ளங்கை மேல் நோக்கி இருக்க, சுவாமியின் உள்ளங்கை கவிழ்ந்து அதைப் பற்றுவதாக உள்ளது. பாணிக்கிரகண கோலத்தில் தரிசனம் தருகின்றனர். (பாணி - உள்ளங்கை, கிரகணம் - பிடித்துக் கொள்ளுதல்)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.