அருள்மிகு வனதுர்க்கா ஆலயம் (கதிராமங்கலம்)

God Name : பொருந்தாது

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

அனைவரையும் துன்புறுத்திக் கொண்டிருந்த அசுரர்களை சம்ஹாரம் செய்யும் பொருட்டு, இளம் பெண் ரூபத்தில் வந்த துர்க்கையை, துர்க்கை என அறியாது மோகம் கொண்டனர் அசுரர்கள். தன்னிடமிருந்து ஒரு மகா சக்தியை தோற்றுவித்தாள் துர்க்கை. அப்படி தோன்றியவளே வனதுர்க்கை. அந்த மகா சக்தியான வனதுர்க்கை காட்டிலுள்ள அசுரர்களை சம்ஹாரம் செய்தாள். விந்தியன் என்ற அசுரனை அழிக்க வேண்டி கோரிய அகஸ்தியருக்கு, காட்டில் வந்து அருள் பாலித்ததால் வனதுர்க்கை எனப் பெயர் கொண்டாள். அசுரவதம் முடித்து சிவமல்லிகா எனும் இவ்வூரில் தங்கி தவமிருந்தாள். அந்த சிவமல்லிகா எனும் கிராமமே தற்போது கதிராமங்கலம் எனப்படுகின்றது. திதியின் புதல்வனான வித்துவன்மாலி என்பவன் கடுந்தவம் மேற்கொண்டான். பிரத்யட்சமான சூரியனைப் போல செயல்பட வேண்டும் என வரம் கோரிப் பெற்றான். இரண்டு சூரியர்கள் மாறி மாறி வலம் வந்ததால், இரவு நேரம் இல்லாது போயிற்று. இதனால் கோபமுற்ற சூரியன், வித்துவன் - மாலியுடன் போர் புரிந்து அவனை கீழே தள்ளினான். இதனால் சிவபெருமானின் கோபத்திற்கு உள்ளானான் சூரியன். திருத்துருத்தி ஆலயத்து தாமரை தடாகத்தில் நீராடி அனுதினமும் சிவபூஜை செய்து வந்தான் சூரியன். சிவபெருமானை நோக்கி கதிரவன் தவம் செய்த இடம் என்பதால் கதிராமங்கலம் எனப்படுகின்றது. வனதுர்க்கையின் பக்தரான கம்பரின் வீட்டுக் கூரை பெருமழையினால் சேதமுற்றது. வனதுர்க்காவிடம் முறையிட்டு விட்டு தூங்கப் போய்விட்டார் கம்பர். காலையில் எழுந்து பார்த்தால், நெற்கதிர்களால் கூரை வேயப்பட்டிருந்தது. கதிர் வேய்ந்த நாயகி உறையும் இடம் என்பதால் கதிராமங்கலம் ஆனதோ?
மூலஸ்தானத்தில் கம்பீரமான ஆகிருதியுடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ வனதுர்க்கா, மிகுந்த வரப்பிரசாதியாகப் போற்றப்படுபவள். முன் பக்கம் துர்க்கையின் திருவுருவும், பின்புறம் படம் எடுக்கும் சர்ப்பம் போலவும் காட்சி தரும் அழகான திருவுருவம். கிழக்கு நோக்கி தாமரை மலர் மீது நின்ற திருக்கோலம். ஸ்ரீ வனதுர்க்காவிற்கு அர்ச்சனை செய்யும்போது, அன்னையின் வலதுகர உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படும். இத்தலத்தின் முறைப்படி வனதுர்க்கையை நான்கு முறை வலம் வர வேண்டும். தங்களது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் இந்த வனதுர்க்கையை குலதெய்வமாக பாவிக்கின்றனர். ராகு தசை, ராகு புக்தி நடக்கும் காலத்தில் கஷ்டப்படும் நபர்கள், எலுமிச்சம்பழ விளக்கேற்றி, எலுமிச்சம்பழ மாலை சாத்தி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். பால் அபிஷேகம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும். நேர்த்திக்கடன்களை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செய்வது விசேஷம். துர்க்கா தேவியை ராகு வழிபடும் நேரமே ராகு காலம். தான் வழிபடும் நேரத்தில் - தன் பிடியில் உள்ளவர்கள் வழிபடுவதால் ராகு மகிழ்வார் என ஐதீகம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.