அருள்மிகு அபிமுக்தீச்வரர் திருக்கோயில் (தொழுதாலங்குடி)
God Name : அபிமுக்தீச்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சுற்றுப்புறங்களில் மேய்ந்த பசுக்கூட்டங்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட தொழுவம் எனும் அமைப்பு இருந்த ஊர் என்பதனால் தொழுதாலங்குடி எனப் பெயர் பெற்றது. பசுவாக மாறும்படி சிவபெருமானால் சபிக்கப்பட்ட உமையவளும் இந்தப் பசுக்கூட்டத்தோடு இங்குள்ள தொழுவத்தில் தங்கியதாகத் தல வரலாறு கூறுகிறது.
மூலவர்: அபிமுக்தீச்வரர், அம்பாள்: அபிராமி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அபிமுக்தீச்வரர். அபிராமி அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். மிகச் சிறிய கிராமத்தின் அந்தணர் வீதியின் வடகோடியில் அமைந்துள்ள சிவாலயம் இது.
தென்மேற்கே அமைந்துள்ள பெருமாள் கோயிலில் தாயார் புண்டரீகவல்லியுடன் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.
நித்ய பூஜைகள் சரிவர செய்யப்படாமலும், பராமரிக்கப்பட வேண்டிய நிலையிலும் உள்ள கோயில்களுள் இதுவும் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.