அருள்மிகு கிருபா கூபரேச்வரர் திருக்கோவில் (கோமல்)
God Name : கிருபா கூபரேச்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பசுவாக மாறிய அம்பாள் தங்கிய இடங்களுள் ஒன்று. அதாவது கோ தங்கிய மஹால் கோமல் என்றானதாக கூறுவர்.
பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றி விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார் இறைவன். விளையாட்டாக அவரது கண்களைப் பொத்துகிறார் பார்வதி. உலகம் இருளில் மூழ்குகிறது. இயங்குவது நின்று போயிற்று. பிரபஞ்சம் இருளில் மூழ்கியதால் கோபமுற்ற சிவபெருமான் தனது கரத்திலிருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் தான் மறையப் போவதாகவும், அதைப் கண்டுபடித்து பின்னர் தன்னிடம் வந்து சேரவும் என்றும் கூறி, உமையவளை பசுவாக மாறும்படி சபிக்கின்றார்.
பூமியெங்கும் சிவஜோதியை தேடி அலைந்த பசுவாகிய அம்பாள், இத்தலத்தில் ஓர் ஹஸ்த நட்சத்திர நாளில் தோன்றிய ஹஸ்தாவர்ண ஜோதி எனப்படும் கோமளீய ஜோதியை கண்டதும் மகிழ்ந்தாள். முன்பே கூறியபடி அம்பாளை தன்னுடன் ஐக்யப்படுத்திக் கொண்டு கிருபை புரிந்ததனால் இவ்விறைவன் கிருபா கூபரேச்வரர் எனும் பெயர் கொண்டார் என ஸ்தல வரலாறு.
சித்தர்களும் மஹா முனிவர்களும் ஹஸ்த நட்சத்திர நாளில் இவ்விறைவனை வழிபட்டு சந்நிதியை வலம் வருவதாக ஐதீகம். அந்நாளில் லட்டு, போளி, கொழுக்கட்டை, வடை போன்ற பட்சணங்களை நைவேத்யம் செய்து, தானம் செய்து விட்டு, இறைவனையும் இறைவியையும் வலம் வந்து பிரார்த்திக்கின்றனர்.
வீர சோழ மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் என்பர்.
மூலவர்: கிருபா கூபரேச்வரர், அம்பாள்: அன்னபூரணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கிருபா கூபரேச்வரர். கருணா சமுத்ர மூர்த்தி என்று தமிழில் அழைக்கின்றனர். சுயம்பு மூர்த்தம். அத்தனை பேருக்கும் அன்னமிடும் அன்னையாக எழுந்தருளி அருள் புரிகின்றாள் அன்னபூரணி அன்னை.
பிள்ளையார், முருகன், லட்சுமி மற்றும் நடராஜர் சந்நிதிகளை தரிசிக்கலாம். பிரகார வலச் சுற்றில் விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், சூரியன், பைரவர், நவகிரஹங்கள், ராமர்-லக்ஷ்மணர்-சீதா தேவி ஆகிய திருவுருங்களை தரிசிக்கலாம்.
இங்குள்ள நடராஜர் கொள்ளை அழகுடன் இருக்கின்றார். திருவாதிரை அன்று நடராஜர் புறப்பாடு அந்நாளில் வெகு ஜோராக இருக்குமாம். சுப்பிண்டு சாஸ்திரி எனும் சுப்ரமண்யர் சாமவேதம் ஓதிக் கொண்டே கோவிலை வலம் வருவாராம். உற்சவங்கள் சிறப்பாக நடத்தப்பட்ட ஊர் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
மொட்டை லிங்கம் என அழைக்கப்பட்ட அமிர்தகடேஸ்வரர் கோவில் வடக்கு ஒத்தைத் தெருவிலுள்ளது. ஆதி கேசவப் பெருமாள் கோவில் மற்றும் ரேணுகா பரமேச்வரிக் கோவில் இவ்வூரிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.