அருள்மிகு மங்கள மஹா மாரியம்மன் திருக்கோவில் (ஆட்டூர் - கங்காதரபுரம்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சுற்றுவட்டார கிராமங்களில் வசித்தவர்கள்/வசிப்பவர்கள் ஆகியோரின் கண்கண்ட குலதெய்வமாக இந்த மாரியம்மன் போற்றப்படுகின்றாள். ஆதிகாலத்தில் கோமலை சேர்ந்த அப்புசாமி அய்யரும், அவரது மகன் பரமேஸ்வர அய்யரும், அவரது மகனான கோமல் சுப்ரமண்ய அய்யரும் இக்கோவிலுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்ததாக ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது. திண்ணையுடன் இருந்த பழைய ஓட்டுக்கட்டடக் கோவிலை விரிவுபடுத்தி, ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் உருவாக்கியுள்ள ஒரு தனியார் ஒருவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். கோடிக்கணக்கான பணம் செலவழித்து கோவிலை விரிவுபடுத்தியதுடன் நில்லாமல், பக்தர்கள் இளைப்பாற ஒரு விடுதி ஒன்றும் கட்டியுள்ளனர். வேத பாடசாலை ஒன்றும் ஆரம்பித்து ஏழை பிராமண சிறுவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு ஆகிய கைங்கர்யங்களை செய்து வருகின்றனர். திருமண மண்டபம் ஒன்றும் விரைவில் கட்ட இருக்கிறார்கள். திரு. வெங்கடேஷ் நாராயணஸ்வாமி மற்றும் அனுஜா வெங்கடேஷ் (என்.ஆர்.ஐ) ஆகியோர் இந்த புண்ணிய காரியங்களை செய்து வருகின்றனர். (ஸ்ரீலஸ்ரீ ஞானானந்த அகஸ்திய குரு கிருபா சேவா ட்ரஸ்ட்) (23.6.2004 -- மஹா கும்பாபிஷேகம்). தினசரி அபிஷேகம் - காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிரத்தையாக நடத்துகின்றனர். வெளியூர்களிலிருந்து வருபவர்களின் வசதிக்காக அபிஷேகப் பொருட்களை அவர்களே ஏற்பாடு செய்கின்றனர். முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். உண்டியல் கிடையாது. காணிக்கை ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
ஆட்டூர் எனப்படும் கங்காதரபுரத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள அன்னை ஸ்ரீ மங்கள மஹா மாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. சிறிய மூர்த்தமாக அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். மிகப் பெரிய திருமேனியுடன் மாரியம்மன் திருவுருவம் பழைய மூர்த்தியின் பின்னால் உள்ளது. கருவறை வாசலில் இரண்டு துவார பாலகிகள் மிகப் பெரிய திருவுருவங்களாக காவலுக்கு உள்ளனர். ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ பால முருகன், ஸ்ரீலஸ்ரீ லோபமாதா சமேத அகஸ்தியர் மற்றும் உற்சவ மூர்த்திகளை வலச் சுற்றில் தரிசிக்கலாம். ஸ்ரீ காளியம்மன், காளியம்மனின் பரிவாரங்கள், பேச்சியம்மன் மற்றும் கிராம தேவதைகளும் தனிக்கோவிலில் இடம் பெற்றுள்ளனர். உண்டியல் கிடையாது. காணிக்கை ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.