அருள்மிகு ஸ்ரீ நிவாசப் பெருமாள் திருக்கோவில் (மாந்தை)
God Name : மூலவர்: ஸ்ரீ நிவாசர்் உற்சவர்: ஸ்ரீ வெங்கடாஜலபதி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பசு மந்தை நாட்கணக்கில் தங்கிய இடம் என்பதால் 'மந்தை' எனப் பெயருற்று, பின் நாளடைவில் 'மாந்தை' என்றானதாம்.
பசு மந்தையை மேய்த்து வந்த ஆமருவியப்பன், இங்கு ஸ்ரீ நிவாசனாக சேவை சாதிக்கின்றார். சிவபெருமான் ரிஷப வடிவம் எடுத்துக் கொண்டு பசுக்கூட்டங்களோடு சேர்ந்து கொண்ட ஸ்தலம்.
மாட்டுப் பொங்கலன்று மாலை ஸ்ரீ நவநீத நர்த்தன கிருஷ்ணன் விக்ரஹம் வீதி உலா புறப்பட்டு நேர்கிழக்கேயுள்ள சிவாலயம் வரை செல்வார். (ஒரு கி.மீ. தூரம்) சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பசுக்களை ஓட்டிக் கொண்டு கூடவே வருவார்கள். கண்ணன் பசுக்களை மேய்த்துக் கொண்டு போவதாக ஐதீகமாக காட்டுகின்றனர்.
மாலை மரியாதைகளுடன் சௌந்தரேச்வரர் வந்து எதிர் கொண்டு அழைத்து, பதில் மரியாதைகளைப் பெற்று செல்வார்.
மூலவர்: ஸ்ரீ நிவாசர்் உற்சவர்: ஸ்ரீ வெங்கடாஜலபதி் தாயார்கள்: ஸ்ரீ தேவி - பூதேவி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ நிவாசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவியும் பூதேவியும் உடன் உள்ளனர்.
உற்சவராக ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ நவநீத நர்த்தன கிருஷ்ணன் சிறப்பு மூர்த்தமாக சேவை சாதிக்கின்றார். கொள்ளை அழகுடன் விளங்கும் விக்ரஹம்.
சிவாலயத்தின் மூலவராக ஸ்ரீ சௌந்தரேச்வரரும் அபிராமி அன்னையும் எழுந்தருளி அருள் புரிகின்றனர். மங்கள விநாயகரை தரிசிக்கலாம்.
இவ்வூரில் சாஸ்தா கோவிலொன்றும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.