அருள்மிகு மாசிலாமணீச்வரர் திருக்கோவில் (திருவாவடுதுறை)
God Name : மூலவர்: மாசிலாமணீச்வரர், உற்சவர்: அணைத்தெழுந்த நாயகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சாபத்தினால் பசு வடிவம் கொண்ட அம்பாள் - தேரழுந்தூர், தொழுதாலங்குடி, கோமல், ஸ்ரீ கண்டபுரம், மாந்தை ஆகிய இடங்களில் பசுவாக சுற்றித் திரிந்து, திருக்குளம்பியத்தில் லிங்க வடிவை கண்ணுற்று பேரானந்தம் கொள்கின்றாள். இந்த ஊருக்கு வந்ததும், காவிரியில் நீராடி சுய உருவம் பெறுகின்றாள். அதாவது மீண்டும் பெண்ணுருவம் அடைகின்றாள். ஆ (பசு) - ஆடி (நீராடிய) - துறை என்பதால் திருவாவடுதுறை என அழைக்கப்படலாயிற்று. கோ (பசு) விற்கு முக்தி அளித்த நாயகர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்ற பெயர் கொண்டார். தாக்க வந்த மன்னனின் படைவீரர்களிடமிருந்து, போகரின் சீடரான திருமாளிகைத்தேவரை காப்பாற்றும்படி, நந்திதேவரை பணித்தார் சிவபெருமான். அவரைக் காப்பாற்றிய நந்தி தேவரே இங்கு பிரம்மாண்டமாக எழுந்தருளியுள்ளார். ஒரு சமயம் ஞானசம்பந்தரின் தந்தை சிவபாத ஹிருதயர் - பெரிய யாகம் ஒன்றை செய்யவிருப்பதாகவும் அதற்கான பொருளை தரும்படியும் ஞானசம்பந்தரிடம் கேட்டார். உடனே ஞானசம்பந்தர் இவ்வாலயத்து இறைவனிடம் முறையிட்டு பதிகம் பாடினார். சிவபூதம் ஒன்று வந்து பொற்கிழியை பீடத்தின் மீது வைத்து விட்டு சென்றது. பொற்கிழியை எடுக்கச் சென்ற ஞானசம்பந்தர் பீடத்தினடியில் திருமந்திர திருமறைகள் இருப்பதை தெரிந்து கொண்டு பீடத்தை எடுக்க செய்து அவற்றை கண்டுபிடித்தார். ஆலயத்தின் பலிபீடத்தினடியில் திருமந்திரத் திருமுறைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து எடுத்தருளியவர் ஞானசம்பந்த பெருமானார் என வரலாறு. பல க்ஷேத்ரங்களுக்கு சென்று வழிபட்டுக்கொண்டு வந்த சுந்தரர் இங்கே வந்து இவ்விறைவனை பாடியதும், கோமுக்தீஸ்வரர் அவருக்கு திருவாரூர் தியாகராஜனாகவே காட்சி தந்தருளினார். சுந்தரரின் நோய் நீங்கப் பெற்றது. முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்ரபாக்யம் நல்கியதால் புத்ர தியாகேசர் எனப் போற்றுவர். ஸ்தல விருட்சமான அரசமரத்தை போதி அம்பலம் என்பர். தேவர்களும் முனிவர்களும் பார்க்க இறைவன் இங்கு நடனமாடியதாக கூறுவர். திருமூல நாயனார் இந்த அரசமரத்தடியின் கீழ் 3000 ஆண்டுகள் யோகத்திலிருந்து, சிவாகமங்களில் உணர்த்தப்பட்டவைகளை நான்கு பாதங்களாக பிரித்து அருளினார். அவை ஞானம், யோகம், கிரியை, சரியை என்பதாகும். இவற்றை 3000 பாடல்களாகத் தொகுத்தார். இவைகள் திருமந்திரத் திருமுறைகள் எனப்படும். (நந்தியம்பெருமானின் அருள் பெற்ற சிவயோகி ஒருவர், அகஸ்தியரைக் காணவும், சிவாலயங்களை தரிசிக்கவும் பொதிகை மலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் அஷ்டமாசித்திகளிலும் வல்லவர். திருவாவடுதுறைக்கு வந்து மாசிலாமணீஸ்வரரை வழிபட்டு விட்டு திரும்பி செல்கையில், காவிரிக் கரையோரமாக, மூலன் எனும் இடையன் இறந்து கிடப்பதையும், அவனைச் சுற்றி நின்று பசுக்கூட்டம் அழுவதையும் கண்டார். பசுக்களின் மீது பரிவு கொண்டு அதன் துயர் துடைக்க எண்ணிய சிவயோகி, கூடு விட்டு கூடு பாயும் சக்தியை பயன்படுத்தி, தனது உயிரை மூலனின் உடலில் புகுத்தி எழுந்தார். கண் விழித்த மூலனைப் பார்த்ததும் பசுக்கள் துள்ளி குதித்து மகிழ்ந்தன. சாத்தனூரிலுள்ள பசுக்களின் வீட்டில் அவைகளை விட்டு விட்டு, இங்கே வந்து தவம் செய்யத் தொடங்கினார். இவரே திருமூலர். ஆண்டுக்கு ஒன்று என மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் பாடல்களாக சிவபெருமானைப் பாடி அருளினார்.) தர்ம தேவதை, மாசிலாமணீஸ்வரரை குறித்து தவமிருந்து ரிஷப வாகனமாக ஆனது. அரசமரத்தடியிலுள்ள சந்நிதியில் எழுந்தருளியிருக்கும்படி இறைவன் பணித்தார் என வரலாறு. போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கும் அஷ்டமாசித்தி அருளிய ஸ்தலம். தை மாசத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் 5ம் நாள் தியாகர் சந்நிதியிலிருந்து அம்பிகை புறப்பட்டு 3 முறை உட்பிரகாரத்தை வலம் வந்து, மீண்டும் தியாகர் சந்நிதிக்கு வந்து, இருவரும் நடனமாடியவாறு வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் காட்சி அற்புதம். தேவாரத்திருத்தலம் - கோமுக்தித்தலம்.
மூலவர்: மாசிலாமணீச்வரர், உற்சவர்: அணைத்தெழுந்த நாயகர், அம்பாள்: ஒப்பில்லா முலையம்மை. கோபுர வாசலின் வழியே நுழைந்ததும் முதலில் நாம் தரிசிப்பது ஸ்ரீ ஆதி முக்தீஸ்வரர். வடகிழக்கில் உள்ள சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். கோபுர வாசலின் தென்புறம் உள்ள சந்நிதியில் துணை வந்த விநாயகர் தரிசனம் தருகின்றார். பசு வடிவில் பூமிக்கு வந்த அம்பிகைக்கு துணையாக வந்தவர். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள்புரிகின்றார் மாசிலாமணீச்வரர். ஒளி வீசும் அழகான தேஜோ மய லிங்கம். இவருக்கு கோமுக்தீச்வரர் என்ற திருநாமமும் உண்டு. திருவாவடுதுறை இறைவன் என்று கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் ஒப்பில்லா முலையம்மை எழுந்தருளி தரிசனம் தருகின்றார். அதுலத்குஜாம்பாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு. அழகே உருவானவள். ஒரே கல்லினால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான நந்தியின் விஸ்வரூப தரிசனம் காணலாம். பிரதோஷ காலத்தில் தரிசிக்க மன நிறைவு உண்டாகும். உயர்ந்த கொடி மரமும், பலி பீடமும் காணலாம். அணைத்தெழுந்த நாயகர் எனும் உற்சவ மூர்த்தி உமா தேவியை அணைத்தெழுந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கோமுக்தி தீர்த்தத்திலிருந்து அம்பாளை அணைத்தபடி ஸ்வாமி எழுந்தருளியதால் இந்த திருநாமம் கொண்டார். பிரம்மோற்சவத்தின் முடிவில் கோமுக்தி தீர்த்தத்தில் இவரே தீர்த்தம் கொடுப்பார். சிவாலய கோஷ்ட மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்றின் பரிவாரத் தேவதைகளும் அழகாக இருக்கின்றன. அகஸ்திய முனிவருக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்த அழகிய விநாயகர் கோஷ்டத்திலுள்ளார். இவரே ஸ்தல விநாயகர் ஆவார். இவ்வாலயத்தில் ஒரே இடத்தில் மூன்று சூரியர்கள் இருப்பது விசேஷம் என்பர். ஸ்வர்ணத் தியாகர் எனப்படும் செம்பொன் தியாகர் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார். வீர சிங்காதனத்தில் காட்சி தருகின்றார். இவரது நடனம் சுந்தர நடனம். முசுகுந்த சக்ரவர்த்திக்கு திருவாரூர் தியாகராஜராக காட்சி தந்தவர். இவரது சந்நிதியில் புத்திர விடங்கர் எனும் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்கும் பாக்யம் கிட்டுகிறது. முசுகுந்த சக்ரவர்த்திக்கு மகப்பேறு அளித்தவர். ஸ்தல விருட்சமான அரச மரத்தினடியில் திருமூல நாயனாரின் கோவில் இருக்கின்றது. நவகிரகங்கள் இல்லை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.