அருள்மிகு ஸ்வர்ணகிரீஸ்வரர் திருக்கோயில் (அசிக்காடு)
God Name : ஸ்ரீ ஸ்வர்ணகிரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பசுவாக அலைந்து கொண்டிருந்த அம்பிகை, இத்தலத்தில் தனது நகைகளை எல்லாம் கொட்டி மலை போல் குவித்து ஸ்வாமியாக பாவித்து வழிபட்டாள். ஸ்வர்ணங்களாலான மலையாக இருந்ததால் ஸ்வாமி ஸ்ரீ ஸ்வர்ணகிரீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். அம்பிகை ஸ்வாமியை வாத்ஸல்யத்தோடு வழிபட்டதால் ஸ்ரீ வாத்ஸல்ய நாயகி எனப் பெயர் கொண்டாள்.
மூலவர்: ஸ்ரீ ஸ்வர்ணகிரீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ வாத்ஸல்ய நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகிறார் ஸ்ரீ ஸ்வர்ணகிரீஸ்வரர். உயரமான பாணத்துடன் கூடிய அழகிய லிங்கம். கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தெற்கு நோக்கி அம்பாள் ஸ்ரீ வாத்ஸல்ய நாயகி எழுந்தருளி தரிசனம் தருகிறாள். நுழைவாயிலருகே பிள்ளையாரும் தண்டபாணியும் உள்ளனர்.
பிரகார வலச்சுற்றில் கணபதி, முருகன், பைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகிய மூர்த்தங்களைக் காணலாம். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் வடிவம் பேரழகுடன் இருக்கிறது.
ஸ்வாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அமையப் பெற்ற சந்நிதிகளையுடைய கோயில்களை மிஸ்ராலயம் என்றும் அகத்தீஸ்வரம் என்றும் ஆகம நூல்கள் கூறுகின்றன.
இவ்வூரிலுள்ள பெருமாள் கோயிலில் மூலவராக எழுந்தருளியுள்ள லட்சுமிநாராயணரையும், உற்சவ மூர்த்தங்களாக சேவை சாதிக்கும் ருக்மணி சத்யபாமா உடனாய நவநீத பாலகிருஷ்ணனையும் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.