அருள்மிகு வைகல்நாதர் திருக்கோவில் (திருவைகல்)
God Name : வைகல் நாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பூமி தேவியை திருமால் மணந்ததால் கோபம் கொண்ட திருமகள், திருமாலைப் பிரிந்து, பூலோகம் வந்து இங்குள்ள ஷண்பகாரண்யத்தில், சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டாள். சிவபெருமானின் முயற்சியால் பூமி தேவியுடன் இங்கு வந்த திருமால், ஸ்ரீ தேவியுடன் மீண்டும் இணைந்தார். அவர்களது திருமணக் கோலத்தை சிவபெருமானும் பார்வதியும் கண்டு மகிழ்ந்தனர் என ஸ்தல வரலாறு.
பெண் யானையைக் காணாது தேடி வந்த ஆண் யானை ஒன்று இங்குள்ள புற்றை சிதைக்க முற்பட்டது. புற்றிலிருந்து புறப்பட்ட யானையும், யானையைக் கொன்ற பாவங்கள் நீங்க வேண்டி சிவபெருமானை வழிபட்டது என ஸ்தல வரலாறு.
இவ்வூரில் மூன்று சிவாலயங்கள் இருக்கின்றன. சிவபெருமானின் இடக்கண்ணாக பாவிக்கப்படும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ஊருக்கு வடக்கேயும், வலக் கண்ணாக பாவிக்கப்படும் விஸ்வநாதர் ஆலயம் ஊருக்கு தெற்கேயும், நெற்றிக்கண்ணாகத் திகழும் வைகல்நாதர் ஆலயம் ஊருக்கு மேற்கேயும் அமைந்துள்ளன.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: வைகல் நாதர், அம்பாள்: கொம்பிளங் கோதை.
கோச் செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் வைகல்நாதர் கோவிலும் ஒன்று. உயரமான மேடையில் அமைந்திருப்பதால் தெற்கிலும் வடக்கிலும் உள்ள படிகளின் வழியே ஏறிச் செல்ல வேண்டும்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிபவர் ஸ்ரீ வைகல் நாதர். கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய சுயம்பு லிங்கம். இவருக்கு வைகல் மணவாளன், சண்பகாரண்யேச்வரர் ஆகிய பெயர்களும் உண்டு.
ஸ்வாமிக்கு வலப்புறமாக, சற்று தாழ்வான பகுதியில் அம்பாள் கொம்பிளங் கோதை எனப்படும் சாகா கோமளவல்லி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தியும், கணபதியும் அழகாக இருக்கின்றனர். ஸ்ரீ தேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாளை வலச் சுற்றின்போது சேவிக்கலாம். மஹாலட்சுமி வழிபட்ட ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.