அருள்மிகு மெய்ஞானேஸ்வரர் திருக்கோவில் (திருவிற்குடி - மயானம்)
God Name : திருமெய்ஞானேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஜலந்திரன் இறந்ததை அறிந்த பிருந்தை மிகவும் துயருற்று, இறந்த கணவனின் உடலுக்கு தீ மூட்டி, அதில் குதித்து தானும் உயிர் நீத்தாள். இதை அறிந்த அம்பிகை பிரம்மனிடம் சில விதைகளைத் தந்து, அதை எரிந்த பிருந்தையின் சாம்பலில் போட்டு, அதன் மீது அமிர்தத்தைத் தெளிக்கும்படி கூறினாள். அவ்வாறே பிரம்மனும் செய்ய அங்கு துளசி செடி தோன்றியதாம். இதுவே பிருந்தாவன துளசியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமிர்தத் தாரையால் தோன்றிய லிங்கமே பிருந்தமயானேஸ்வரர் ஆவார்.
பிருந்தை மயானம் என்றும் மயானேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் விமானத்தில் பிரம்மா ஜலந்திரனுக்குப் பெயர் சூட்டுதல், ஜலந்திரனுடன் பிருந்தை, சிவ சக்கரத்தால் ஜலந்திரன் நிலை குலைதல் போன்ற சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூலஸ்தானத்தில் மூலவராக திருமெய்ஞானேஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாய் எழுந்தருளியுள்ளார். இவருக்கு பிருந்தமயானேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் சந்நிதி இல்லை. கோவிலுக்குள் மரத்தால் செய்யப்பட்ட ஜலந்திரனின் உருவம் ஒன்றும் உள்ளது. பளபளக்கும் கண்கள், வாளும் கேடயமும் கொண்ட கரங்கள் ஆகியவற்றுடன் காணப்படுகின்றான். சங்க தீர்த்தத்தின் தென்மேற்கு மூலையில் ஐயனார் கோவில் ஒன்றும் உள்ளது. ஐயனாரை சொக்கநாதர் என்றும் அழைக்கின்றனர். இங்கு துளசி செடியே ஸ்தல விருட்சமாக உள்ளது. துளசியால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.