அருள்மிகு ஸ்ரீ மூலநாதஸ்வாமி திருக்கோவில் (கீழத்தஞ்சாவூர்)
God Name : ஸ்ரீ மூலநாதஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
இத்தலத்தில் பிறந்த செருத்துணை நாயனார், திருவாரூர் தியாகராஜருக்கு மலர்களைக் கொண்டு செல்லும் தொண்டைப் புரிந்து வந்தார். இறைவனுக்கெனப் பறித்து வைத்திருந்த மலர்களில் ஒன்றை அரசனின் மனைவி எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டாள். சிவ அபராதம் நிகழ்ந்ததெனக் கோபமுற்ற செருத்துணை நாயனார் அவளது மூக்கை வெட்டிவிட்டார். அரசியின் கூக்குரலைக் கேட்டு ஓடி வந்த அரசனிடம் நடந்ததைத் தெரிவித்தார். "மலரை எடுத்த கையையும் வெட்டி இருக்க வேண்டும்" எனக் கூறிக் கொண்டே அரசர், அரசியின் கையையும் வெட்டிவிட்டாராம். அங்கு பிரத்யட்சமான சிவபெருமான், இழந்த மூக்கையும் கையையும் திருப்பித் தந்து, நாயன்மாரை ஆட்கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இது ஒரு தேவார வைப்புத்தலம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ மூலநாதஸ்வாமி எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். அகிலாண்டேஸ்வரி அன்னை உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். செருத்துணை நாயனாரின் திருவுருவத்தைக் காணலாம். எதிரே உள்ள குளக்கரையில் பஞ்சலிங்கங்களைக் காணலாம். 32 பட்டைகள், 64 பட்டைகள் கொண்ட திருமேனி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.