அருள்மிகு ராமநாதஸ்வாமி திருக்கோவில் (ஸ்ரீ ராமனதீச்சரம்)

God Name : ராமநாதஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ராவணனைக் கொன்ற பாவம் விலக, ஸ்ரீ ராமர் இவ்விறைவனை வழிபட வந்தபோது நந்தியம் பெருமான் அவரை தடுத்தாராம். அம்பாள் நந்திதேவரை அடக்கியதாக கூறப்படுகின்றது. இவ்வாலயத்திலுள்ள சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவரை அம்பாள் தன் கைக்குள் அடக்கி வைத்திருப்பது போன்று அமைந்திருக்கின்றது. ஸ்ரீ ராமர் வழிபட்ட லிங்கம் என்பதனால் ராமநாதஸ்வாமி என்ற திருநாமமும், இவ்வு+ருக்கு ராமனதீச்சரம் என்ற பெயரும் வந்தன. தேவாரத்திருத்தலம்.
மூலவர்: ராமநாதஸ்வாமி, அம்பாள்: கருவார் குழலியம்மை எனப்படும் சரி குழல் இலங்கிய தையல். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் ஸ்ரீ ராமநாதஸ்வாமி. மிகப் பெரிய திருமேனி. தீபாராதனை காட்டும்போது அதன் ஒளி பாணலிங்கத்தின் மீது பட்டு பிரதிபலித்து பிரகாசமாக காட்சி தரும் லிங்க மூர்த்தம். ஆகிருதியான வடிவம். தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் கருவார் குழலியம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சூளிகாம்பாள் என்று வடமொழியில் அழைப்பர். திருப்புகலூர் தேவியின் திருநாமத்தை கொண்டவள் ஆயினும் சரி குழல் இலங்கிய தையல் என்றும் கூறுவார்கள். வலச்சுற்றில் - கன்னி மூல கணபதி, முருகப் பெருமான் மற்றும் மிகப் பெரிய திருமேனியுடன் காட்சி தரும் பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். அகஸ்தியரின் திருவுருவமும் அவர் பிரதிஷ்டை செய்த பைரவரையும் தரிசிக்கலாம். ஸ்தல விநாயகரான அனுக்ஞை விநாயகர் வரப்ரசாதி. ஆலயத்தின் எதிரே அழகிய அல்லிக்குளம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.