அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோவில் (திருமருகல்)

God Name : மாணிக்கவண்ணர் எனப்படும் ரத்னகிரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

திருமருகலுக்கு மாலை அணிவிப்பது போல் முடிகொண்டான் ஆறு வடக்கிலும், புத்தாறு தெற்கிலும் பாய்ந்தோடுகின்றன. கதலிவன க்ஷேத்ரமாக இருந்த இப்பகுதிக்கு வந்த குசகேது அரசன், காட்டை வெட்டி சீரமைக்கும்போது ரத்தம் பெருகுவதைக் கண்டு, தேடிப் பார்த்ததில் இவ்விறைவனைக் கண்டெடுத்து பின்னர் ஆலயம் எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. திருமருகலின் தென்மேற்கே உள்ள வைப்பூர் எனும் ஊரைச் சேர்ந்த செட்டியார் குலப்பெண் ஒருத்தி, தனது மாமனை மணம் செய்து கொள்ள விரும்பினாள். பெற்றோர்களின் ஒப்புதல் கிடைக்காததால், வீட்டுக்குத் தெரியாமல் புறப்பட்டு, மாணிக்கவண்ணரை தரிசிக்க இருவருமாக வந்தனர். தரிசனம் முடித்து இவ்வூரின் விடுதி ஒன்றில் தங்கினர். செட்டிப்பெண்ணின் மாமனை பாம்பு ஒன்று தீண்டி விடுகிறது. இறந்த மாமனின் உயிரை மீட்டுத் தருமாறு, மருகலுடையாரிடம் மன்றாடி வேண்டிக்கொண்டாள். இரவு முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்ததும், மாணிக்கவண்ணரை வழிபட அங்கு வந்த ஞானசம்பந்தப் பெருமான், அப்பெண்ணின் துயரக் கதையைக் கேட்டறிந்து, சிவபெருமானிடம் வேண்டி விடந் தீர்த்த பதிகம் ஒன்றைப் பாடுகிறார். இறைவன் கருணையால் மாண்டவன் மீண்டான். உயிர் பெற்றெழுந்த வணிகனுக்கும் அந்தப் பெண்ணிற்கும், மாணிக்கவண்ணர் முன்னிலையில், வன்னி மரம் மற்றும் கிணறு இவ்விரண்டையும் சாட்சியாக வைத்து, திருமணம் செய்து வைக்கிறார் ஞானசம்பந்தர். மதுரையிலுள்ள வணிகனின் தாய்-தந்தையர்கள், நடந்த திருமணத்தை நம்ப மறுத்து, அவதூறு பேசினர். மாணிக்கவண்ணரை தியானித்து வேண்டினான் வணிகன். சாட்சியாக இருந்த வன்னி மரமும் கிணறும், மதுரை கோவிலில் காட்சி தந்ததாம். அசரீரியாக வந்த வாக்குப்படி திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டது. மதுரையில் சிவபெருமான் திருவிளையாடல் புரிய காரணமாயிருந்த ஸ்தலம். பிருகு முனிவரின் சாபத்தால் பூலோகம் வந்த மகாலட்சுமி, வரலட்சுமி நோன்பன்று, இத்தலத்து புஷ்கரிணியில் நீராடி, விமோசனம் பெற்றாள் என்பர். இதனால் புஷ்கரிணி லட்சுமி தீர்த்தம் எனப்படுகிறது. மருகல் என்பது ஒருவகை கல்வாழை. இது ஸ்தல விருட்சமாக இருப்பதால் இவ்வூருக்கு திருமருகல் எனப் பெயர் வந்தது. தேவாரத்திருத்தலம்
மூலவர்: மாணிக்கவண்ணர். அம்பாள்: வண்டுவார் குழலி எனப்படும் ஆமோதள நாயகி. கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக்கோவில்களுள் ஒன்று. சுவாமி சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. ஏறிச் செல்லும் படிக்கட்டுக்கள் முன்புறம் இராது, பக்கவாட்டில் இருக்கும். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, சுயம்புவாக எழுந்தருளியுள்ளார் மாணிக்கவண்ணர். ரத்னகிரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. சதுர பீடத்துடன் கூடிய சிவலிங்கம். பாணத்தின் அடிப்பாகம் வெட்டுத் தழும்புடன் காணப்படுகிறது. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் வண்டுவார் குழலி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். அழகு திருவுருவமாக தரிசனம் தருகிறாள். வட மொழியில் ஆமோதள நாயகி என்பார்கள். கட்டுமலையை விட்டு கீழிறங்கியதும் அம்பாள் சந்நிதியையும் மகா மண்டபத்தையும் காணலாம். மகா மண்டபத்தில் ஸ்தலபுராண தொடர்புடைய வண்ண சித்திரங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன. மாணிக்கவண்ணர் சந்நிதியருகே சோமாஸ்கந்தரின் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதி போகும் வழியில் சனீஸ்வரரின் தனி சந்நிதி இருப்பது விசேஷமானது என்பர். உட்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், அறுபத்திமூவர், நடராஜர் ஆகியோரை தரிசிக்கலாம். ஒரே திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் கொண்ட முருகன், ஒரே பீடத்தில் காணப்படும் செட்டிமகன்-செட்டிப்பெண்-ஞானசம்பந்தர் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். வெளிப்பிரகாரத்தில் சுரம் தீர்த்த விநாயகரும், வடக்கு பிரகாரத்து வில்வ மரத்தடியில் சந்தான விநாயகரும் அமர்ந்து ஆசி வழங்குகின்றனர். மருகலுடையார் லிங்க ஸ்வரூபமாக மேற்கு பார்த்தும், சௌந்தர நாயகி தெற்கு பார்த்தும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.