அருள்மிகு பிரம்மீசர் திருக்கோவில், பெருநகர்
God Name : பிரம்மீசர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
சிருஷ்டித் தொழிலைச் சரிவர செய்ய முடியாமல் போனதற்கு, தான் செய்த தவறுகளே காரணம் எனக் கவலையுற்ற பிரம்மன், இங்குள்ள சேயாற்றின் கரையில் அமர்ந்து லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டார். பிரத்யட்சமான இறைவனின் அருளைப் பெற்று, சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் இவ்விறைவன் பிரம்மீசர் என்ற பெயரைக் கொண்டார்.
மூலவர்: பிரம்மீசர். அம்பாள்: பட்டுவதனாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் பிரம்மீசர். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய லிங்கம். தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் பட்டுவதனாம்பிகை, அழகே உருவான அம்பிகை.
பஞ்சாங்க கணபதி, சக்ர விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், துர்க்கை, நால்வர், சப்த மாதர்கள், நவக்கிரகங்கள், ஜ்யேஷ்டா தேவி ஆகிய மூர்த்தங்களை வலச்சுற்றில் தரிசிக்கலாம்.
மூலையில் மகா பைரவர் மற்றும் வலச்சுற்றில் அஷ்ட நாகங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.