அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் (திருக்குவளை)
God Name : மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: அவனி விடங்கர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
தனக்கு ஏற்பட்ட தோஷங்களைப் போக்கிக் கொள்ள, பிரம்ம தேவன் இத்தலத்தில் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணல் கொண்டு தன் கைகளாலேயே உருவாக்கிய லிங்கத்தை அனுதினமும் பூஜித்து, தோஷங்களிலிருந்து விடுபட்டார் என ஸ்தல வரலாறு.
பீமன் - பகாசூரனைக் கொன்ற பாவத்திலிருந்தும் ஹத்தியிலிருந்தும் விடுபட இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு.
'கோள்' என்றால் குற்றம் என்ற பொருளும் உள்ளது. 'கிரகங்கள்' என்ற பொருளும் உள்ளது. நவகிரகங்களின் குற்றங்களை இவ்விறைவன் நீக்கி அருளியதால் இவ்வூர் 'கோளிலி' எனப் பெயர் கொண்டது.
விடங்கர்:
'டங்கம்' என்றால் உளி, 'விடங்கம்' என்றால் உளி தீண்டாமல் உருக்கொண்டவர் எனப் பொருள்.
புத்திரப்பேறு வேண்டி, திருமால் - பிருகு மகரிஷியின் யோசனைப்படி, சோமாஸ்கந்தரை வழிபட்டு வந்தார். ஒரு க்ஷணமும் பிரியாது, சோமாஸ்கந்தரை பூஜித்து வந்தார் திருமால்.
புத்திர பாக்கியம் வேண்டி திருமாலிடம் வந்த இந்திரனுக்கு தான் வழிபட்டு வந்த சோமாஸ்கந்தரை தந்தருளினார் திருமால்.
வாலாசுரன் எனும் அசுரன் தேவர்களை எல்லாம் வென்று தேவேந்திரனை போருக்கழைத்தான். இந்திரனால் அவனை வெல்ல முடியாமல் போனதால், வியாழனின் யோசனைப்படி, முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். எதற்கும் அஞ்சாத முசுகுந்தன் போரில் வாலாசுரனை தோற்கடித்து வெற்றி கொண்டான். வெற்றி பரிசாக திருமாலிடமிருந்து பெற்ற சோமாஸ்கந்தரை கேட்டான்.
அதை தர மனமில்லாத தேவேந்திரன், மயனின் உதவியுடன், அதைப் போலவே ஆறு மூர்த்திகளை உருவாக்கி, திருமாலிடமிருந்து பெற்றதையும் சேர்த்து, ஏழு மூர்த்திகளை முசுகுந்தனிடம் காண்பித்து இந்த ஏழு திருவுருவங்களில் நீ வேண்டுவது யாது எனக் கேட்டான்.
சிறந்த சிவபக்தனான முசுகுந்தனிடம், இறைவனே - இதனைக் கேள் என சுட்டிக் காட்டினார். இறைவனின் வழிகாட்டுதலால் சரியான மூர்த்தியை அடையாளம் காண்பித்த முசுகுந்தனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த இந்திரன், மயன் மூலமாக உருவாக்கிய ஆறையும் சேர்த்து ஏழு மூர்த்திகளையுமே முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விட்டான்.
இதுவே சப்த விடங்கர்கள் உருவானதற்கான புராண குறிப்புகள்.
தேவாரத்திருத்தலம் - சப்த விடங்க ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: அவனி விடங்கர், அம்பாள்: பிரஹந் நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பிரம்மபுரீஸ்வரர். சந்திர நதியின் வெண் மணலால் பிடித்து உருவாக்கப்பட்ட லிங்கம். பிரம்மன் உருவாக்கியதால் பிரம்மபுரீஸ்வரர் என்றுப் பெயர். திருக்கோளிலி உடையார் மற்றும் கோளிலிநாதர் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு.
குவளை சாத்தி அபிஷேகம் செய்கின்றனர். அமாவாசையன்று அர்த்த ஜாம வழிபாட்டின்போது சாம்பிராணித் தைலம் பூசுகின்றனர்.
கோஷ்ட மூர்த்தங்களும், பிரகாரத்திலுள்ள மூர்த்தங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. அகஸ்தியர் பூஜித்த சிவலிங்கம் பிரகாரத்திலுள்ளது.
தியாக விநாயகர், சுந்தர வடிவேலர், பிட்சாடனர், சந்திரசேகரர், சொக்கநாதர், உமா மகேஸ்வரர் ஆகியோரின் திருவுருவங்கள் கலையம்சத்துடன் உள்ளன. அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரம்மா திருவுருவங்கள் ஒரே கல்லினால் உருவானவை எனக் கூறப்படுகிறது.
அம்பாள் பிரஹந் நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். வண்டமர் பூங்குழலி, பிரம்மராம்பிகை ஆகிய பெயர்களும் உண்டு.
கருவறையின் தென்பகுதியான மஹாமண்டபமருகேயுள்ள தியாகராஜர் சபையில் அவனி விடங்கர் எழுந்தருளியுள்ளார். பெரிய விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகே தனி சிறப்புடையது. இவர் ஆடுவது ப்ருங்கி நடனம் - அதாவது வண்டானது பூவைச் சுற்றி சுற்றி வந்து குடைந்து தேனைப் பருகுதலும் மீண்டும் சுற்றி வருதலுமாக ஆடும் பாவனை.
மஹா மண்டபத்தில் உலோகத்தாலான ரிஷபம் உள்ளது. எதிரே பரவை நாச்சியாருடன் சுந்தரர் காட்சி தருகின்றார். மண்டப முகப்பின் மீது திருமால் தனது மார்பில் தியாகராஜரை வைத்து பூஜிக்கும் காட்சி சுதை சிற்பமாக உள்ளது. இந்த சந்நிதியில் மரகத லிங்கத்தை பூஜிக்கின்றனர்.
பகாசூரனுடைய உருவமும், ஹத்தியின் உருவமும் முன் கோபுரத்தில் இருக்கின்றன.
இங்கு நவகிரகங்கள் வக்கிரமின்றி வரிசையாக உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.