அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் (திருவாய்மூர்)
God Name : வாய்மூர்நாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலவர்: வாய்மூர்நாதர், அம்பாள்: பாலினும் நன்மொழியாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக வாய்மூர்நாதர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். தேஜோமயமான அழகிய சிவலிங்கம்.
அம்பாள் பாலினும் நன்மொழியாள் எனப்படும் க்ஷீரோபவாஸினி வடக்கு பிரகாரத்தில் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
பங்குனி மாதம் 12, 13 தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமி மீதும் அம்பாள் மீதும் படர்ந்து சூரிய பூஜை நடைபெறுகிறது.
கருவறையின் வடபுறத்தில் வேதாரண்யேஸ்வரர் சந்நிதி உள்ளது.
தெற்கு பிரகாரத்தில் தியாகராஜரின் சபை உள்ளது. இதில் எழுந்தருளியிருப்பவர் நீல விடங்கர். இவர் ஆடுவது கமல நடனம் - அதாவது குளத்திலுள்ள தாமரை மலர், தென்றல் வீசுவதற்கேற்ப ஆடும் பாவனை. நீல ரத்தினக் கல் லிங்கம் மற்றும் உயர்வகை ஸ்படிகக் கல்லில் உருவான ஸ்படிக லிங்கம் இந்த சந்நிதியில் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
உமா மகேஸ்வரர், காரைக்கால் அம்மையார் ஆகிய சிற்பங்களும் கோஷ்ட மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன.
ஏழு பைரவ மூர்த்திகள் இத்தலத்தில் உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.