அருள்மிகு பார்வதீச்வரர் திருக்கோவில் (திருக்களாச்சேரி - கோவில்பத்து)

Primary Deity
பார்வதீசர்
Temple Type
ஆதீஸ்வர் கோவில்
Location
பெரம்பலூர்
Contact Number
+91-Not Available

ஸ்தல வரலாறு:

பஞ்சம் நிலவிய காலத்தில், இறைவனே கூடையை தோளில் சுமந்து, விதைகளைத் தெளித்ததாலும், தெளித்த விதைகள் நன்கு முளைத்ததாலும், இவ்வூர் தெளிச்சேரி எனப் பெயர் கொண்டது.

பார்வதி தீர்த்த குளக்கரையில் வீற்றிருக்கும் விநாயகர், ஞான சம்பந்தரை பத்து முறை கூவி அழைத்தாராம். இதனால் கூவிப்பத்து என்றழைக்கப்பட்ட இவ்வூர், காலப் போக்கில் மருவி கோவில்பத்து என்றானதாக கூறுகின்றனர்.

இதனால் இந்த பிள்ளையாரை சம்பந்த விநாயகர் என்று அழைக்கின்றனர்.

அழகிய கோபுரமும் - கோபுரம் முழுவதும் பலவிதமான பிள்ளையார்களின் வண்ண சுதைச் சிற்பங்களும் பார்க்க அழகாக இருக்கின்றன.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் பார்வதீசர். சுயம்பு மூர்த்தம். பங்குனி மாதம் 13ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமியின் மேல் படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. ஸ்வாமிக்கு பின்புறம் உள்ள கிராதமூர்த்தியின் சிற்பம் அற்புதமாக உள்ளது. வேட்டுவச்சியும், வேட்டை நாயும் உடன் இருக்க, கையில் வில் அம்பு ஏந்திய கிராதமூர்த்தி அழகாக இருக்கின்றார். விநாயகர், வள்ளி-தெய்வயானை உடன் இருக்கும் சுப்ரமண்யர், சனீஸ்வர பகவான் சந்நிதிகள், கோஷ்ட மூர்த்தங்கள், வலச்சுற்றின் பரிவார தேவதைகள், உற்சவ திருமேனிகளாக செப்புப் படிமங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...